தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 6 augustus 2013

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!


வாஸ் குணவர்தனவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடருமாறு கோரிக்கை
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 03:15.22 PM GMT ]
இலங்கை தொழிற்நுட்ப அறிவியல் கல்லூரி மாணவரான நிபுண தனுஷ்க ராமநாயக்கவை கடத்திச் சென்று கடுமையாக தாக்கிய சம்பவத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடருமாறு சட்டமா அதிபருக்கு ரீட் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி ராமநாயக்கவும் அவரது தாயாரும் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நீதியரசர் மாலனி குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கு முன்னர், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், அத்துருகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பாணை அனுப்புமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் தொடர்பாக புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 03:23.02 PM GMT ]
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர் உள்ளிட்ட அகதிகளை நாவுரு தீவிற்கு அனுப்புவது தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று இன்று கைச்சாத்தானது.
இந்த ஒப்பந்தம் நாவுரு, பசுபிக் தீவுகளின் ஜனாதிபதி பாரோன் வகா மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் ஆகியோருக்கு இடையே கைச்சாத்தானது.
சட்டவிரோத குடியேறிகளை பப்புவா நியூகினியாவிற்கு அனுப்புவதற்காக அவுஸ்திரேலியாவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைக்கு அமையவே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் இதன் மூலம் வலுப்பெறுவதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten