தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 6 augustus 2013

வெலிவேரிய தாக்குதல்: சர்வதேசம் தலையிடுவதற்கான வழிகளை அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளது- துப்பாக்கி பிரயோகம் செய்யுமாறு உத்தரவிட்டது யார்?


ஈழ உணர்வு மூலம் இருவரும் இணைந்தோம்! திருமணம் பற்றி சீமான் விளக்கம்!
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 02:47.15 PM GMT ]
இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார்.
செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வை.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது.
உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார்.
மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது:
சிறு வயது முதலே கயலுக்கும் ஈழக் காதல். இதனால் அவரது மகள் கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளது. ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை நான் தொடங்கிய பின்னர் பல்வேறு ஈழ போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். இந்த போராட்டங்கள் அவரை கவர்ந்துள்ளது.
பிரபாகரனின் மகன் தம்பி பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அம்பலமான சமயத்தில் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்போது கயல்விழி என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஈழ மக்கள் படும் துயரங்களை வருத்தத்துடன் பேசி என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஈழப் போராட்டம் தொடர்பாக அவர் வைத்திருந்த உறுதி எனக்கு பிடித்து இருந்தது.
அதே நேரத்தில் நீண்ட நாட்களாக மறைந்த டைரக்டர் மணிவண்ணன் ஐயா பழநெடுமாறன் மற்றும் எனது நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தி வந்தனர்.
ஈழப்போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்த என்னை தலைவர்கள் வற்புறுத்தல் திருமணத்தைப் பற்றி யோசிக்க வைத்தது.
இந்த நேரத்தில் ஒரு மித்த கருத்து கொண்ட கயல்விழியும் நானும் சந்தித்து கொண்டோம்.
இதையடுத்து எனது பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம்.
ஈழ உணர்வுதான் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது என்றார் சீமான்.

வெலிவேரிய தாக்குதல்: சர்வதேசம் தலையிடுவதற்கான வழிகளை அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளது- துப்பாக்கி பிரயோகம் செய்யுமாறு உத்தரவிட்டது யார்?
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 02:01.04 PM GMT ]
அரசாங்கமே சர்வதேசம் இலங்கையில் தலையிடுவதற்காக சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கில போலவே அரசாங்கம் தெற்கிலும் கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் அரசாங்கமே சர்வதேசம் நாட்டில் தலையிடுவதற்கு வழிவகுக்கின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அரசாங்கமே துரும்புச் சீட்டை வழங்குகிறது என்றார். வெலிவேரிய சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெலிவேரிய சம்பவத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்யுமாறு உத்தரவிட்டது யார் என்பதை அரசு வெளியிட வேண்டும்- ஊடக அமைப்புகள்
குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய ரத்துபஸ்வல மக்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்துமாறு கட்டளையிட்டது யார் என்பதை அரசாங்கம் வெளியிட வேண்டும் என ஊடக அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடக அமைப்புகள் கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தின.
இதில் கலந்து கொண்ட சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்து கொண்டார்.
அமைதியான போராட்டத்தின் மீது யார் துப்பாக்கிச் சூட்டை நடத்துமாறு ஆணையிட்டது என தான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார்.
இங்கு உரையாற்றிய இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் லசந்த ருகுணுகே, சம்பவத்தில் ஊடகவியலாளர்களும் காயமடைந்தனர் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர்கள் மறைந்து இரவு நேரத்தை கழிக்க நேர்ந்தது. இப்படியான சம்பவங்கள் தொடர்பாக செய்திகளை சேரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றால் ஏன் அவர்களுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்க வேண்டும் என கேள்வி எழுப்ப நேரிடும் என்றார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பின் ஏற்பாட்டாளர் சந்தன சிறிமல்வத்த, குடிநீர் போன்ற மனிதர்களின் அடிப்படை உரிமையை கூட அரசாங்கத்தினால் வழங்க முடியாதுள்ளது என கூறினார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசாங்கம் மக்கள் பக்கமா அல்லது பணத்தை முதலீடு செய்தவர்களின் பக்கமா என்பது, இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாகியுள்ளது என தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுதந்திர ஊடக அமைப்பின் செயலாளர் குமார அழகியவண்ண, சம்பவம் நடைபெற்ற போது இராணுவ உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்து, 05 நிமிடங்களில் அங்கிருந்து கலைந்து கொள்ளுமாறு உத்தரவிட்டதாக கூறினார்.
அப்போது அங்கிருந்த தாய் ஒருவர், “அப்படி செய்ய வேண்டாம், போரில் ஈடுபட்டிருந்த போது, உங்களுக்காக நாங்கள் போதி பூஜைகளை நடத்தியவர்கள்” என தெரிவித்தார்.
அதற்கு அந்த தாயிடம் பதிலளித்த இராணுவ அதிகாரி அது தமக்கு தேவையற்றது என கூறியதாக அழகியவண்ண குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten