[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 04:37.55 AM GMT ]
டிசிடி பதார்த்தம் இருப்பதாக குற்றம் சுமத்தப்படும் தமது உற்பத்திகளை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் சந்தையில் இருந்து மீளப்பெறவுள்ளதாக பொன்டேரா (Fonterra) நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பொன்டேரா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக திரு சி.வி விக்கினேஸ்வரன் அவர்களைத் தெரிவு செய்தமையைக் கனடியத் தமிழர் பேரவை மகிழ்வோடு வரவேற்கிறது.
அதில், டிசிடி பதார்த்தம் அடங்கியுள்ள இறக்குமதி பால்மா உற்பத்திகளை இலங்கையில் சுகாதார அமைச்சு தடை செய்துள்ளமையை அடுத்தே இந்த அறிவிப்பை பொன்டேரா விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின்படி, இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்மாக்களும் டிசிடி அற்றவையென உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, அங்கர் வன் பிளஸ் (தொகுதி இலக்கம்- 107610163), அங்கர் புல் கிறீம் மில்க் பவுடர் (தொகுதி இலக்கம்- 0605C0883), மெலிபன் நொன் பெட் மில்க் (தொகுதி இலக்கம் 13074யA1) , டயமன்ட் மில்க் பவுடர் (தொகுதி இலக்கம் NW1F1PDX1) என்பன சந்தையில் இருந்து மீளப்பெறப்படவுள்ளன.
தொடர்புடைய செய்தி
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்கினேஸ்வரன் தெரிவு: கனடியத் தமிழர் பேரவை வரவேற்பு
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 05:11.03 AM GMT ]
பெயர்பெற்ற வழக்கறிஞராக விளங்கி, உயர் நீதிமன்ற நீதவானாகத் திகழ்ந்து இன்று அரசியலுக்கு வந்திருக்கும் திரு விக்கினேசுவரன் பல்லாண்டு காலச் சட்ட அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.
இறையாண்மைச் சட்டம், உள்நாட்டுச் சிக்கல்களைக் கையாளும் திறன் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழரோடு, இணைந்து செயற்படும் இவரது ஆற்றல் என்பன வேறு எந்தவொரு முதலமைச்சர் வேட்பாளரோடும் ஒப்பிட முடியாதளவு உயர்ந்து நிற்கிறது.
சட்ட வல்லமை மட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் குரல்கொடுக்கும் செயற்பாட்டாளரான இவரது தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் செயற்பாடுகளையும் பலப்படுத்தும் என்பதில் கனடியத் தமிழர் பேரவை பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் திரு விக்கினேசுவரனின் தலைமையும் எதிர்வரும் செப்டெம்பர் நடைபெறவிருக்கும் வட மாகாணசபைத் தேர்தல் நியாயமானதாகவும் சுயாதீனமானதாகவும் நடைபெற்றால் பெரும் வெற்றியீட்டுவர் என்பதில் ஐயமில்லை எனக் கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசுக்கும் சர்வதேயத்துக்கும் ஓர் காத்திரமானதும் தெளிவானதுமான செய்தியைத் தெரிவிக்க வட மாகாணத் தமிழர் அனைவரும் தங்கள் மக்களாட்சி உரிமையைத் தவறாது பயன்படுத்தி இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.
அத்தோடு உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அனைவரும் தங்களால் இயன்ற அனைத்துப் பங்களிப்பையும் திரு விக்கினேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வழங்க வேண்டுமெனவும் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.
Geen opmerkingen:
Een reactie posten