vrijdag 9 augustus 2013

சர்வாதிகார ராஜபக்ஷ ரெஜிமெண்டுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: ஐக்கிய சக்தி அமைப்பு

மத்­தள சர்­வ­தேச விமான நிலைய சேவை­யை விஸ்­த­ரிப்­ப­தற்கு அரசாங்கம் நட­வ­டிக்­கை! சீனாவிடம் 900 கோடி கடன்!
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 05:16.55 AM GMT ]
மத்­தள மஹிந்த ராஜ­பக்ச சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்கு விமான சேவையை விஸ்­த­ரித்து பய­ணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க அரசு நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்­றது. 
அம்­பாந்­தோட்டை, மத்­தள பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட மஹிந்த ராஜ­பக்ச சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்குச் செல்லும் விமா­னங்­களின் எண்­ணிக்கை குறை­வ­டைந்­துள்­ளது.
இதனை கருத்­திற்­கொண்டு விமா­னங்கள் மற்றும் பய­ணி­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கும் நோக்கில் அர­சாங்கம் மத்­தள விமான நிலை­யத்தின் ஊடாக இலங்கை செல்லும் விமானக் கட்­ட­ணங்­களை குறைத்­துள்­ளது.
இதே­வேளை எமிரேட்ஸ், கல்ப் எயார் போன்ற வெளி­நாட்டு விமான சேவை நிறு­வ­னங்­களின் விமா­னங்­களை மத்­தள விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கவும் அங்கு நிறுத்­தி­ வைப்­ப­தற்­கான கட்டணங்களையும் அர­சாங்கம் 50 சத­வீ­த­மாகக் குறைத்­துள்­ளது.
இதனைத் தவிர, விமா­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிவா­ரண காலமும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மார்ச் மாத தொடக்­கத்தில் வெளி­நாட்டு விமா­னங்­க­ளிடம் அற­வி­டப்­பட்ட கட்­ட­ணங்­களில் 50 வீதம் சலு­கை­ய­ளிக்­கப்­பட்­டது. இதற்­கி­ணங்க, இந்தக் கட்­டண சலு­கையை தொடர்ந்தும் வழங்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
மத்­தள மஹிந்த ராஜ­பக்ச சர்­வ­தேச விமான நிலை­யத்­திற்கு வரும் விமா­னங்­களின் எண்­ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த விமான நிலையத்தை, விமானங்களை பழுது பார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் உத்தேசித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மத்தள விமான நிலையத்திற்காக அரசாங்கம் சீனாவிடம் மேலும் 900 கோடி ரூபாவை கடனாக பெறவுள்ளது - ரவி கருணாநாயக்க
பயணிகள் செல்லாத, விமான இறங்காத மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்காக 900 கோடி ரூபாவை சீனாவிடம் இருந்து கடனாக பெற்று கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாவை ஒதுக்கியது. அந்த பணத்தை பயன்படுத்தி விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்து, அதனை பயன்பாட்டுக்கு விட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த பெரும் தொகை பணத்தை மீண்டும் கடனாக பெற திட்டமிட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, விமானங்களில் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, அரசாங்கம் சீனாவிடம் இருந்து இந்த கடனை பெற திட்டமிடவில்லை.  இது பற்றி அரசாங்கத்திடம் கேட்டால், நிர்மாணிப்பு பணிகளுக்காக செலுத்த வேண்டிய நிலுவை பணத்தை செலுத்துவதற்காக இந்த கடன் பெறப்பட உள்ளதாக கூறுகிறது.
இவ்விதமாக மதிப்பீடு செய்யப்பட்ட தொகையை விட மேலும் 900 கோடி ரூபாவை கடனாக பெறுவதன் மூலம் மத்தள விமான நிலையத்தை நிர்மாணிக்க பெறப்பட்ட வெளிநாட்டு கடன் 90 சத வீததத்தையும் தாண்டும் என்றார்.

சர்வாதிகார ராஜபக்ஷ ரெஜிமெண்டுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: ஐக்கிய சக்தி அமைப்பு
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 06:35.39 AM GMT ]
குடிநீர் கேட்ட நாட்டின் அப்பாவி மக்கள் மீது மனிதாபிமானமின்றி துப்பாக்கி சூட்டை நடத்தி கொலை செய்த கொலைகார சர்வாதிகார ராஜபக்ஷ ரெஜிமெண்டுக்கு எதிராக நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பு சக்தி ஒன்றை கட்டியெழுப்ப போவதாக ஐக்கிய சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அரசியல் கட்சிகள், சர்வமத அமைப்புகள், சிவில் அமைப்பு, வெகுஜன அமைப்புகள் என பல சமூக அமைப்புகள் இணைந்து இந்த ஐக்கிய சக்தி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த அமைப்பு நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளதுடன் முதலாவது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட உள்ளது.
மனித உயிர்களை மதிக்காது, நிராயுத பணிகளான மக்களை ஈவிரக்கமின்றி கொலை செய்து, சர்வாதிகார இராணுவ ஆட்சியை நாட்டில் கட்டியெழுப்பி வரும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக மனிதாபிமானத்தை மதிக்கும் அனைவரும் கறுப்பு ஆடைகளை அணிந்து அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய சக்தி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கொலைகார ஆட்சியில் இருந்து மீள வேண்டுமாயின் மக்கள் ஒரே பாதையில் ஐக்கியமாக ஒன்றிணைய வேண்டும். இதன் மூலமே அதனை செய்ய முடியும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten