zaterdag 3 augustus 2013

வெலிவேரிய பிரதேசத்தில் மக்களை இராணுவம் தாக்கும் அதிர்ற்சிக் காட்சிகள்

சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய மக்கள் மீது சிறீலங்கா ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக பலியானார். தலைநகர் கொழும்பில் இருந்து 20Km தூரத்தில் உள்ள (Weliweriya) வெலிவெரியா என்ற இடத்தில் வசிக்கும் சுமார் 4′000 பேர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுகளால் வெலிவெரியா மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த… 15 கிராமங்களின் குடிநீர் மாசடைவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் தூய்மையான குடிநீர் வழங்குமாறும் மாசுக்கு காரணமான தொழிற்சாலையை மூட வேண்டும் எனவும் வற்புறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைந்து போக செய்தனர். போராட்டக்காரர்களில் சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற ராணுவத்தினர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் குண்டு பாய்ந்து ஒருவர் பலியானார். படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டை புகைப்படம் எடுத்த ஒரு நிருபரின் கேமராவை பறித்து உடைத்துப்போட்ட ராணுவ வீரர்கள் மற்ற நிருபர்களையும் அடித்து விரட்டினர்.
iranuvamiranuvam-1iranuvam-3iranuvam-4iranuvam-11
கம்பஹா, வெலிவேரிய பிரதேசத்திற்கு தொடர்ந்தும் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரத்துபஸ்வல பகுதியில் குடிநீரில் இரசாயன திரவியம் சேர்வதாகவும் அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி பிரதேச மக்கள் கடந்த முதலாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை அடங்க அரசாங்கம் இராணுவத்தை ஏவி மேற்கொண்ட தாக்குதலில் 17 வயது பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதோடு 30ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் வெலிவேரிய பிரதேசத்தில் தொடர்ந்தும் பாதுகாப்பு படையினர் நிலைகொண்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தற்போது பிரதேசத்தின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த நவநுவர வீதி முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.sl1sl2sl2

Geen opmerkingen:

Een reactie posten