zaterdag 3 augustus 2013

வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இராணுவத்தின் கொடூர ஆட்சி!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

ஆட்பதிவு திணைக்களத்தில் பல்வேறு முறைகேடுகள்! ஒரே இலக்கமுடைய 500 அடையாள அட்டைகள்
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 03:16.11 AM GMT ]
ஆட்பதிவுத் திணைக்களத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் ஓரே இலக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகள் ஒரே இலக்கங்களைக் கொண்டிருப்பதாக்கக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த தேசிய அடையாள அட்டைகளை பயன்படுத்துவோர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடையாள அட்டை தயாரிப்பின் போது கணனி பயன்படுத்தப்படாத காரணத்தினால் இவ்வாறான மனிதத் தவறுகள் இடம்பெறுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒரே இலக்கத்தைக் கொண்ட தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவோர் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இராணுவத்தின் கொடூர ஆட்சி!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 03:45.27 AM GMT ]
வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இராணுவத்தின் கொடூர ஆட்சி நடைபெறுகின்றது என்பதற்கு கம்பஹா, வெலிவேரியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கம்பஹா வெலிவேரிய பகுதியில் நேற்று முன்தினம் இராணுவத்தினரும், பொலிஸாரும் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிங்கள இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், இரு ஊடகவியலாளர்கள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மிலேச்சத்தன தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
வீதியில் இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் மக்களை மனிதத் தன்மையுடன் அணுகி பிரச்சினைக்குத் தீர்வுகாண பொலிஸார் முயலவேண்டும்.
ஆனால், இலங்கையில் தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் அரசுக்கு சார்பான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது அமைதியாக இருக்கின்றனர்.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது பொலிஸாரும், இராணுவத்தினரும் வந்து தமது அடாவடியைக் காட்டிவிட்டுச் செல்கின்றனர்.
வடக்கில் தமிழ் மக்கள் மீது தொடரும் இவ்வாறான நடவடிக்கை தற்போது தெற்கில் சிங்கள மக்கள் மீதும் தொடர்கின்றது.
வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இராணுவத்தின் கொடூர ஆட்சி நடைபெறுகின்றது என்பதற்கு கம்பஹா வெலிவேரியவில் நேற்று முன்தினம் நடைபெற்ற சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தமது அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய சிங்கள மக்கள் மீது இராணுவம் மற்றும் பொலிஸார் மிருகத்தனமான முறையில் தாக்குதல் நடத்தி ஒருவரைப் பலியெடுத்ததை தமிழ்க் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. என்றார்.
வடக்கில் ஒன்றரை லட்சம் இராணுவம் நிலை கொண்டுள்ளது, யாழ். குடாநாட்டில் 13 ஆயிரம் இராணுவம் என்பது பொய்: த.தே.கூட்டமைப்பு சாடல்
யாழ். பலாலியிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள் என்ற கோஷத்தை யாரும் முன் வைக்கவேண்டாம் என கூறுவதற்கு இராணுவத் தளபதிக்கு அருகதையில்லை என சாடியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்களுடைய நிலங்கள் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் எனவும் கண்டித்துள்ளது.
விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழுத்தத்தினால் நிலங்கள் விடுவிக்கப்படுவதாக கூறுவது மிகவும் நகைப்பிற்குரிய ஒன்றாகும். அவரால் அழுத்தம் பிரயோகித்து நிலத்தை விடுவிக்க முடியுமென்றால் முதலில் வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களது இடங்களில் குடியேற்றவேண்டும்.
ஆனால் அவரால் அது முடியாத காரியம், பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையிலும், ஐ.நா.மனிதவுரிமைகள ஆணையாளர் நவநீதம்பிள்ளை வருகை தரவுள்ள நிலையிலுமே காணிகள் விரைவாக விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதனையும் தேர்தல் பிரசாரமாக்க பார்கிறார்கள்.
மேலும் வடக்கிள் இராணுவம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதாக அமைச்சர்கள் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் நாங்கள் கூறுகிறோம் வடக்கு மாகாணத்தில் சுமார் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கின்றனர்.
அதே வடக்கு மாகாணத்தில் மக்கள் 10லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மேலும் யாழ். மாவட்டத்தில் 13 ஆயிரம் படையினர் மட்டுமே இருப்பதாக இராணுவத் தளபதி கூறியிருக்கின்றார். ஆனால் மாவட்டத்தில் 3 இராணுவ டிவிசன்கள் உள்ளன. அவற்றில் சுமார் 30ஆயிரம் இராணுவத்தினர் உள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் ஒருவர் கூறியிருக்கின்றார் வட்க்கில் இராணுவத்தையே காண முடியவில்லை என்று. நாங்களும் சொல்கிறோம் அவரால் இராணுவத்தை காணவே முடியாது. ஏனென்றால் அவர்கள் பெரும்பாலனவர்கள் சிவில் உடையில் இறக்கிவிடப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் சிவில் விடயங்கள் முதற்கொண்டு குடும்ப பிரச்சினைகள், வரை அனைத்திலும் தலையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அதனையும் மீறி கூட்டமைப்பு பொய்தான் சொல்கின்றது என்றால், ஆசியாவிலேயே அதிகமான இராணுவம் வடக்கு மாகாணத்திலேயே தங்கியிருக்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கபேயின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ள கருத்தும் பொய்யா?
அதைவிடவும் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான், மன்னாரில் முள்ளிக்குளம், முல்லைத்தீவில் கேப்பாபிலவு உள்ளிட்ட கிராமங்கள் எதற்காக யாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதற்காக இடம்பெயர்ந்து காடுகளில் அகதிகளாக வாழ்கிறார்கள் என்பதற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்லவேண்டும்.
சிறிய முகாம்களை விடுவிக்கிறோம் பலாலியிலிருந்து விடுவிக்க கேட்க வேண்டாம் என் று இராணுவத் தளபதி கூறுகிறாரே அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எங்கே போய் எப்படி வாழ்வது என்று இந்த இராணுவத் தளபதி கூறவேண்டும். எனவே மக்களுடைய நிலம் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் அதற்கு கூட்டமைப்பு தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten