தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

தமிழக மீனவர் பிரச்சினை: இலங்கைத் தூதரிடம் இந்தியா கண்டனம்!


அங்கர் - மெலிபன் - டயமண்ட் பால்மாக்களை விற்பனையிலிருந்து விலக்குமாறு சுகாதார அமைச்சு அவசரப் பணிப்பு
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 12:39.27 AM GMT ]
பால்மா சம்பந்தமான அனைத்து வர்த்தக விளம்பரங்களையும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் மறு அறிவித்தல் வரை தடை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.  நேற்று 7ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சு இந்தத் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
பால் மா தொடர்பாக தற்போது எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையைக் கருத்திற் கொண்டு அனைத்து பால் மா வகைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அமைச்சின் உணவு ஆலோசனைக்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை பால் மா தொடர்பில் எழுந்துள்ள நிலமையைக் கருத்திற்கொண்டு நேற்று உணவு ஆலோசனைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.
இதற்கிணங்க டிசிடி இரசாயனம் உள்ளடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பால்மாவின் மாதிரி நேற்று முதல் கைத்தொழில் தொழில் நுட்ப நிறுவனத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்படி நிறுவனத்தினால் டிசிடி இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள பால் மா வகைகளை விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க மெலிபன் நிறுவனம், பொன்டேரா நிறுவனம், ஜீ. எம். மொகமட் அலி நிறுவனம் ஆகியவற்றுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தினால் டிசிடி உள்ளடக்கப்பட்டுள் ளதாகத் தெரிவிக்கப்பட்ட அங்கர் 1+, அங்கர் முழு ஆடைப் பால் மா, மெலிபன் முழு ஆடைப் பால்மா, டயமண்ட் முழு ஆடைப் பால்மா ஆகியவற்றை உடனடியாக வர்த்தக நிலையங்களிலிருந்து விலக்கிக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க மறு அறிவித்தல் வரை அனைத்துப் பால்மா விளம்பரங்களையும் வெளியிடுவதை தற்காலிகமாகக் இடைநிறுத்துமாறு அக்குழு நிறுவனங்களின் பிரதானிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழக மீனவர் பிரச்சினை: இலங்கைத் தூதரிடம் இந்தியா கண்டனம்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 12:27.23 AM GMT ]
இலங்கையில் நூற்றுக்கும் அதிகமான தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம் வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் தொடர்ச்சியாக மீன்பிடிக்கிறார்கள் என்று தமது தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது என்று பிரசாத் காரியவசம் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை வெளியிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பில் மீன் பிடிப்பதால், தமது வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், இந்திய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் அழுத்தங்கள் அரசின் மீது அதிகரித்தாலேயே அவர்களை சிறைபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.
எனினும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் தெரிவித்தார்.
இந்தியாவின் கவலைகள் கொழும்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கையை விரைவுபடுத்தி, விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் தான் இந்திய அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் பிரசாத் காரியவசம் கூறுகிறார்.

Geen opmerkingen:

Een reactie posten