தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 augustus 2013

தேசியப் பிரச்சினைக்கு எம்மிடமே தீர்வு உள்ளது: ஜே.வி.பி - மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்து ராஜபக்ஷ அரசு உலக சாதனை: ரணில்

ஜி.சி.ஈ உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம் - பரீட்சை நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 05:25.52 AM GMT ]
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சைகள் காலை 8.30 க்கு ஆரம்பமாகும். பகல் நேரம் 12.30 க்கு இரண்டாவது கட்ட பரீட்சை ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிற்பகல் 2.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும்.
நாளை ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சைகளில் பழைய, புதிய பாடத்திட்டங்களின் படி 2 இலட்சத்து 92, 706 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
புதிய பாடத் திட்டத்தின் படி 2 இலட்சத்து 35, 318 பாடசாலை பரீட்சார்த்திகளும், 45,242 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். பழைய பாடத்திட்டத்தின் படி 12,146 தனிப்பட்ட பரீட்சார்த்திகளே தோற்றவுள்ளனர்.
நாடு முழுவதும் 2164 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. விசேட தேவையுடையவர்களுக்கென ரத்மலானையிலும், தங்காலையிலும் பரீட்சைகள் நடத்தப்படும்.
பரீட்சை கடமைகளில் 16,264 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உயர்தர பரீட்சைக்குரிய 5 பாடங்களுக்குமாக தமிழ், சிங்கள மொழிகளில் மொத்தம் 40 லட்சம் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தேர்தல் நடைபெறுவதாக அறிவித்துள்ள பகுதிகளில் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஒலிபெருக்கி பாவனை என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை மண்டபத்துள் பரீட்சை மேற்பார்வையாளர்கள் கூட மாணவர்களுக்கு, பரீட்சார்த்திகளுக்கு இடையூறு அல்லது அவர்களது கவனம் சிதைந்து விடும் விதத்தில் ஒலி கேட்கும் விதத்தில் பாதணிகள் அணிவதும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பரீட்சை நடைபெறும் நாட்களில் பாடசாலை வளவுக்குள் பரீட்சையுடன் தொடர்புடையவர்களைத் தவிர வெளியார் எவரும் உள்ளே செல்லக் கூடாது.
இம்முறை பொலிஸாரின் கூடுதல் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
பரீட்சை நடைபெறும் காலங்களில் பரீட்சை மண்டபத்தினுள் அல்லது பரீட்சை நடைபெறும் வளவுக்குள் வெளியார் வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பரீட்சைகள் நடைபெறும் பகுதியில் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் ஒலிபெருக்கிகள் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் நடைபெறும் காலப் பகுதி என்பதால், பரீட்சை நடைபெறும் மண்டபங்களுக்கு அருகில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தவிர்க்கப்பட்டுள்ளது.
பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தேசியப் பிரச்சினைக்கு எம்மிடமே தீர்வு உள்ளது: ஜே.வி.பி - மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்து ராஜபக்ஷ அரசு உலக சாதனை: ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 05:53.26 AM GMT ]
நாட்டின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தம்மிடமே இருப்பதாக ஜே.வி.பி தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசியப் பிரச்சினையுடன் தொடர்புடைய சமூக, பொருளாதார, அரசியல் என சகல பிரச்சினைகளையும் அறிந்து அந்த பிரச்சினைகளுக்குதான் தீர்வு காண வேண்டும்.
இதுவரை ஆட்சியில் இருந்த எவருக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை. இதனால் இந்த பிரச்சினைக்கான தீர்வு எங்களிடம் இருக்கின்றது என நாங்கள் கூறுகிறோம்.
இதன் முதல் கட்டமாக சமவுரிமையின்மை நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் தேசியமயப்படுத்தப்பட்ட இடங்களில் சமவுரிமைகளை கொண்டு வரவேண்டும்.
இதனை ஜே.வி.பியை தவிர வேறு எந்த கட்சிக்கு செய்ய முடியாது.
சிலர் சமவுரிமையை இல்லாமல் செய்தனர். ஆனால் அதனை அவர்கள் செய்தனர் என்பதை ஏற்று கொள்வதில்லை என சோமவன்ஸ மேலும் குறிப்பிட்டார்.
மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்து ராஜபக்ஷ அரசு உலக சாதனை: ரணில்
தாகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரை கேட்ட மக்களுக்கு துப்பாக்கி தோட்டக்களினால் பதிலளித்த ராஜபக்ஷ ரெஜிமெண்டை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் காலம் வந்துள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிகாரவின் வீட்டில் மத்திய மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெலிவேரிய பிரதேசத்தில் உள்ள குடும்பங்களில் அதிகளவான குடும்பங்கள் இராணுவ குடும்பங்கள்.
யக்கல சந்திரபோதி கல்லூரியை சேர்ந்த பாடசாலை மாணவன் அகில தினேஷ் ஜயவர்தன மனிதாபிமற்ற வகையில் கொலைசெய்யப்பட்டார்.
இதற்கு முன்னர் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளன.
நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறியே 2010 ஆம் ஆண்டு ராஜபக்ஷவினர் மக்களிடம் ஆட்சியமைக்கும் ஆணையை வழங்குமாறு கேட்டனர். எனினும் அது நடக்கவில்லை.
2009 ஆம் ஆண்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் நாட்டை வளர்ச்சிமிக்க நாடாக மாற்றுவதாக உறுதியளித்தனர்.
போர் நடைபெற்ற போது வயிற்றில் ஈர துணிகளை கட்டிக் கொள்ளுமாறு மக்களிடம் கோரினர். மக்கள் பட்டினியை பொருட்படுத்தாது, போருக்கு ஆதரவு வழங்கினர். எனினும் போருக்கு பின்னர் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.
இன்று நாட்டில் வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளன. பொருட்களின் விலைகள், மின்சார கட்டணங்கள் போன்றவற்றை அதிகரித்து ராஜபக்ஷ அரசாங்கம் உலக சாதனை படைத்துள்ளது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten