vrijdag 9 augustus 2013

கொக்கட்டிச்சோலை பகுதியில் நான்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் உட்பட ஏழு பேர் கைது!

தொலைபேசியில் மின்னஞ்சல் மூலம் நிதி மோசடி செய்த நைஜீரிய பிரஜை கைது!
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 12:04.13 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்படும் 5 லட்சம் அமெரிக்க டொலர் பரிசாகக் கிடைத்துள்ளதென ஏமாற்றி மின்னஞ்சல் மூலம் நிதி மோசடி செய்த நைஜீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணப்பரிசு என கூறி மின்னஞ்சல் அனுப்பும் நபர்களின் தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொண்டு அவர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளிலும் குறுந்தகவல் அனுப்பி இவ்வாறு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
பரிசுத் தொகையை இலங்கைக்கு கொண்டுவரும்போது செலுத்த வேண்டிய சுங்க வரியை வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிடுமாறு கோரி நைஜீரிய பிரஜை ஒருவர் மோசடி செய்துள்ளார்.
இது குறித்து விசாரணை செய்த குற்ற விசாரணை திணைக்களத்தினர் கடந்த 5ம் திகதி வத்தளை பகுதியில் வைத்து நைஜீரிய பிரஜையை கைது செய்து வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே உங்களுடைய மின்னஞ்சலுக்கும் தொலைபேசிக்கும் இவ்வாறு தகவல் வந்தால் உடனடியாக 011-2444480-81-82-83 இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு பொலிஸாரிடம் முறையிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தினர் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பகுதியில் நான்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் உட்பட ஏழு பேர் கைது!
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 12:14.55 AM GMT ]
மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆசிரியர் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினை சேர்ந்த நால்வர் உட்பட ஏழு பேரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று காலை தாந்தாமலை பிரசேத்துக்குட்பட்ட கொல்லர்மலை பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் எனவும், ஏனையவர்களில் நால்வர் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது தாயின் தாயார் புதைத்து வைத்த தங்க நகைகளை மீட்கவே தாங்கள் இப்பகுதிக்கு வந்ததாக கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணையின் போது தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் இதில் சந்தேகம் நிலவுவதாகவும் அதன் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten