maandag 12 augustus 2013

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க மேலதிக இயந்திர காலாற்படைத் தளபதியாகவும் நியமனம் !

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மேலதிக இயந்திர காலாற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்றுள்ள லெப்ரினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கா படைத் தரப்பின் கட்டளை அமைப்பின் மாற்றத்தின் போது யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க மேலதிக இயந்திர காலாற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண்டு பாதுகாப்பு கற்கையை முடித்துத் திரும்பும், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா மேற்குப் பிராந்தியத்தின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், சிறப்பு படைப்பிரிவின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கவச படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸும், பெண்கள் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் எல் பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொறியியற் படைப்பிரிவின் தலைமை இயக்குனராக பிரிகேடியர் திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலகு காலாற்படைப் பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவும், கொமாண்டோப் படைப்பிரிவின் தளபதியாகவும், தியத்தலாவ இராணுவப் பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரியாகவும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten