[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 05:30.42 PM GMT ]
அண்மையில் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் இலங்கையில் ஏற்கனவே காணாமல் போனவர் என்ற வகுதிக்குள் சேர்க்கப்பட்டிருந்தார் என்று கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் குறித்த நபரின் தாயார், தனது மகன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று முறையிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு கடத்தப்பட்டவர் இலங்கை நீதிமன்றத்தில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது, காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten