மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வழமையாக ஒலிக்கப்படும் ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு யாரும் தடைவிதிக்கவில்லை என கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் செயலாளர்; தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை கிழக்கு ஆலயங்களில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு இராணுவம் தடை விதித்துள்ளதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதுடன், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினருக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளியான செய்தியும் பொய்யானதே என தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
எமது ஆலயத்தில் வழமையாக ஒலிபரப்பப்பட்டு வரும் புதுவை இரத்தினதுரையின் பாடலான “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” என்ற பாடல் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வருவதாகவும், அதனை தடைசெய்யும் உரிமை யாருக்கும் இல்லை என்பதுடன், அவ்வாறு யாராவது தடைசெய்வார்களானால் சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம்.
எனவே இனிமேல் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப்படுத்திவிட்டு பிரசுரிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten