dinsdag 13 augustus 2013

ஆஸி. செல்ல முயற்சித்த 111 பேர் காலி துறைமுகத்தில் தடுத்து வைப்பு

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த 111 பேர் காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கடந்த 10ம் திகதி காலி கடற்படை முகாமிலிருந்து 220 மைல் தொலைவில் வைத்து 88 பேரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் கைது செய்யப்பட்டவர்களினின் தொகை தற்போது 111ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவர்கள் ருவன்புத்தா என்ற படகில் கடந்த 7ஆம் திகதி பேருவளையிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten