விடுதலைப்புலிகளிள் தோற்கடிக்கப்பட்டுள்ளதால், பயங்கரவாதம் தொடர்பிலான ஆபத்தான நிலைமை நாட்டிற்குள் இல்லை என்று சிலர் நினைப்பது பெரும் தவறு என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
புத்தளம் நாத்தாண்டிய கட்டுநேரிய பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்களில் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழம் என்ற கனவை கைவிட முடியாத சிலர் புலம்பெயர் தமிழர்களில் உள்ளனர். அவர்கள் தமது கனவை நனவாக்கி கொள்ளும் நோக்கத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் நோக்கம் மாறாமல் தொடர்கின்றது. ஆனால் அவர்கள் கடைபிடித்து வரும் நடைமுறையில் மாற்றங்கள் உள்ளன.
அவர்கள் இலங்கையின் முதலீடு, சுற்றுலா துறைகளின் வளர்ச்சிகள் தொடர்பிலான விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு பொருளாதார வளர்ச்சியின் மீது தாக்குதல்களை தொடுக்கும் முனைப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் மனித உரிமைகளை பிரதான ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten