donderdag 15 augustus 2013

வடமாகாண தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிடும் 5 உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் நீக்கியது?

நாட்டில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கையில் உயர்வு
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 02:12.38 AM GMT ]
இலங்கையில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றம் கல்விக்கான நிதியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய தெளிவின்மை, பொருளாதார நிலைமைகள் போன்றவற்றால் இவ்வாறு சிறுவர் திருமணங்கள் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக, அதன் இலங்கைக்கான பிரதிநிதி ரீசா ஹொசைனி தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் திருமணம் முடித்த 71 பேர் மத்தியில் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களில் 30 சதவீதமானவர்கள், 18 வயதுக்கு முன்னதாகவே கருத்தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.
இவ்வாறான சிறுவர் திருமணங்களால், மன உளைச்சல், சுகாதார சீர்கேடுகள், சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பதுடன், அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் ஏனைய வன்முறைகளும் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து நாட்டு மக்களுக்கு போதிய தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாண தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிடும் 5 உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் நீக்கியது?
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 01:22.34 AM GMT ]
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தனித்துப் போட்டியிடும் கட்சியின் முடிவுக்கு மாறாக, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐந்து உயர்பீட உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. 
இல்ஹாம்,கரீம், முதாஜித், நஜாத், ஜெகியா ஆகியோரு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென்று கட்சி ஒருமனதாக முடிவெடுத்துள்ள நிலையில், அதனை அவமதிக்கும் வகையில், செயற்பட்டுள்ள ஐந்து பேரையும் கட்சியை விட்டு நீக்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முடிவு செய்துள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten