donderdag 15 augustus 2013

13ம் திருத்தச் சட்டத்தை மாற்றுவது இந்தியாவை அவமானப்படுத்துவதற்கு நிகரானது!- வீ.சூரியநாராயணன் !

13ம் திருத்தச் சட்டம் மாற்றி அமைக்கப்படுமாக இருந்தால், இலங்கை அரசாங்கம் இந்தியாவின் முகத்தில் அறைந்ததுக்கு சமமானது என்று, முன்னாள் ஆசிய ஆராய்வு மையத்தின் இயக்குனர் வீ.சூரியநாராயணன் தெரிவித்துள்ளார்.
த டெய்லி டெலிகிராப்பிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
அதனை மாற்றி அமைப்பதும், மாற்றி அமைப்பதற்கு இந்தியா அனுமதிக்கின்றமையும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
இலங்கை அரசாங்கத்தின் இந்த போக்கு, இந்தியாவின் கட்டுப்பாட்டினை மீறி செல்வதாக அமைகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையைகட்டுப்படுத்தும் விடயத்தில், இந்தியா , பாகிஸ்தானுடன் கூட தோற்றுள்ளதாக த டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தமது அண்டைய நாடுகளின் கட்டுப்பாட்டை சிறந்த முறையில் பேணுகிறது.
ஆனால் இலங்கையின் கட்டுப்பாட்டை இந்தியா படிப்படியாக இழந்து வருகிறது
13ம் திருத்தச்சட்டம் இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் அறிமுகப்பமுத்தப்பட்டிருந்து.
ஆனால் அது பலவந்ததாக தங்களிடம் தினிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் தற்போது கூறுவதுடன், இதனை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறது.
இது இந்தியா இலங்கையை கட்டுப்படுத்த தவரிவிட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறதுஎன்று அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten