தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 augustus 2013

கரடியனாறு பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியால் பல வீடுகள் சேதம்!- யானை தாக்கி 5 வீடுகள் சேதம்


மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு, இராஜபுரம், கெவிலியாமடு, கித்தூள் போன்ற இடங்களில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 10இற்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 50இற்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட இடங்களை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்,கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யானை தாக்கி 5 வீடுகள் சேதம்
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் தாக்கம் கட்டுமீறிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று 39ம் கொலனி செல்வாபுரக் கிராமத்திற்குள் புகுந்த யானைக் கூட்டம் 05 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது.
அவர்களது ஜீவனோபாயத்திற்காக விளைவித்த பயிர்களை அழித்துள்ளதாக அங்கு விஜயம் செய்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.
மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம் மற்றும் பிரசன்னா ஆகியோர் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்து சேதவிபரங்ளைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten