தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 augustus 2013

பத்தாயிரம் கோழைகளை விட 100 தைரியசாலிகளினால் நாட்டை மாற்ற முடியும்: சரத் பொன்சேகா


யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இங்கிலாந்து வைத்தியர் சங்கமும் அவுஸ்ரேலிய மெரியச் சங்கமும் உபகரணங்கள் அன்பளிப்பு
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 03:19.03 AM GMT ]
யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்ணியல் நோய்ப் பிரிவுக்கு அண்மையில் நூறு வில்லைகளும், அதனோடு தொடர்புடைய உபகரணங்களும் இங்கிலாந்து வைத்தியர் சங்கத்தினாலும், அவுஸ்ரேலிய மெரியச் சங்கத்தினாலும் அன்பளிப்பு செய்யப்ட்டுள்ளது.
கண் வைத்தியர் மலரவனின் முயற்சியாலும், யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தின் முயற்சியாலும் கண் சத்திர சிகிச்சை உபகரணங்கள் கிடைக்கப் பெற்றதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சிறி பவானந்தராஜா தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறான உதவிகள் தொடர்ந்து கிடைக்கும் எனக்குறிப்பிட்ட யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் இதனால் யாழ் மாவட்ட மக்கள் பலனடைவார்கள் என சுட்டிக்காட்டினார்.
அத்துடன் யு.என்.ஐ நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் வடமாகாண மக்கள் நமையைப் பெற்றுக்கொளள் முடியும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் சிறி பவானந்தராஜா மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் அமைக்கப்பட்ட மத்திய செயற்பாடுகளுக்கான கட்டிடத் தொகுதியினை பாரமரிக்க சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.
புதிய கட்டிடத்தை பாராமரிப்பதில் சில சிக்கல்கள் எழும் என ஆரம்பத்தில் எதிர்வுகூற்ப்ட்ட போதும் வைத்தியசாலை நிர்வாகமும் ஒப்பந்தக்காரர்களினதும் சிறந்த செயற்பாட்டினால் அதனை பராமரிக்க முடிந்ததாகவும் அதனை தொடர்ந்து பேணுவதற்கு அனுபவ பட்டவர்களின் சேவை தொடர்ச்சியாக தேவையென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிரூட்டிகள், லிப்ற் என்பன ஒழுங்காக பராமரிக்கப்பட வேண்டும் என தெரிவித்த பணிப்பாளர் பவானி பசுபதிராஜா, கட்டிடத்தினை பராமரிக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
அதனை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சினால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய நடைமுறைப்படுத்துவதற்கு சில செயற்திட்டங்களை வகுத்துள்ளதாகவும், இதற்குரிய அனுமதி சுகாதார அமைச்சினால் கிடைக்கப்பெற்றதும் இதற்குரிய நடைமுறைகள் செயற்படுத்தபப்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரு வருடம் பூர்த்தியாக உள்ள இக்கட்டிடத்தொகுயில் சில இடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதனை அவதானிக்க கூடியவாறு உள்ளது.
எனவே வைத்தியசாலைக்கவரும் பொது மக்கள் மற்றும் ஊழியர்களும் அதனை பராமரிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பத்தாயிரம் கோழைகளை விட 100 தைரியசாலிகளினால் நாட்டை மாற்ற முடியும்: சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 02:32.59 AM GMT ]
பத்தாயிரம் கோழைகளை விடவும் நூறு தைரியசாலிகளினால் நாடை மாற்றியமைக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று அரசியலில் ஈடுபடும் பலர் பாலியல் வல்லுறவு கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாகும்.  பழைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது.
மக்களுக்கு சேவையாற்றுவதனை விடவும் இவர்கள் தங்களது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
இன்று பல வீடுகளில் மூன்று வேளை சாப்பிடுவதில்லை, மிகவும் சிரமப்பட்டு இரண்டு வேளை உணவு உட்கொள்கின்றனர்.
கோழைகளே சட்டத்தை கையில் எடுத்து மக்களை அச்சுறுத்துவார்கள்.
நாம் சட்டத்தை மதிக்கின்றோம் எந்த சந்தர்ப்பத்திலும் குற்றச் செயல்களுக்கு இடமளிக்க மாட்டோம் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten