zaterdag 3 augustus 2013

வெலிவேரியவில் கொல்லப்பட்ட 17 வயது மாணவன்! தாயார் அடையாளம் காட்டினார்!- மாணவனின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பு

தங்க சங்கிலியை கொள்ளையிட்ட இராணுவ வீரர் கைது - சங்கானை மருத்துவமனை வீதி மிகவும் ஆபத்தான நிலை!
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 06:07.11 AM GMT ]
கொழும்பு பொரலஸ்கமுவ வேரஹெர மோட்டார் வாகன பரிசோதனை அலுவலகத்திற்கு எதிரில் தங்க சங்கிலி திருடிய இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பேரை கத்தியால் குத்தி விட்டு, தங்க சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொள்ளையிட்ட இரண்டு தங்க சங்கிலிகள், மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொரலஸ்கமுவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் கொழும்பு கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் களவாடப்பட்ட ஒன்றென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு 32 வது எனவும் அவர் மொனராகலை எதித்திமலைவெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸர் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபரின் கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்த இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் சங்கானை மருத்துவமனை வீதி மிகவும் ஆபத்தான நிலை!:  பிரதேச சபை கூடிய கவனம் எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட வடலியடைப்பு சங்கானை வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மிகவும் ஆபத்து நிறைந்ததாகக் காணப்படுகின்றது.
அந்த வீதியில் பயணிப்போர் பெரும் ஆபத்தை எதிர் நோக்கிவருவதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிட்ட பிரதான வீதியில் கட்டப்படும் மதவு மற்றும் உள்புறம் கட்டப்படும் வெள்ளவாய்க்கால் எனபன பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதுடன் போக்குவரத்து செய்வதிலும் பொது மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலமையும் காணப்படுகின்றது.
மதவு கட்டப்படுபகின்ற போதிலும் போதிய பாதுகாப்பு எவையும் செய்யப்படாமல் பள்ளமாக காணப்படுகிறது.
இந்நிலையில் இரவு நேரங்களில் வீதியால் பயணிக்கும் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு பிரதேச சபை கூடிய கவனம் எடுத்து இத்தகைய நிலமையை மாற்ற வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

வெலிவேரியவில் கொல்லப்பட்ட 17 வயது மாணவன்! தாயார் அடையாளம் காட்டினார்!- மாணவனின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பு
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 06:24.23 AM GMT ]
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி வெலிவேரிய, ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆரப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவன் இணங்காணப்பட்டுள்ளார்.
கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை அவரது தாயார் பிரியங்கா ஜயவர்தன அடையாளங் காட்டியுள்ளார்.
குறித்த இளைஞனின் பெயர் அகில தினேஷ் ஜயவர்தன. 17 வயதான அவர் யக்கல சந்த்ரஜோதி வித்தியாலயத்தில் தரம் 12ல் கல்வி கற்று வந்தவர்.
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் தனது தாயாரை சந்திப்பதற்காக அங்கு சென்று கொண்டிருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவனின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்: ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்க ஒன்றியம்
வெலிவேரிய பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்த யக்கல சந்திரபோதி கல்லூரியில் பயின்ற மாணவரான அகில தினேஷின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுபேற்க வேண்டும் என்று ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீரில் விஷ இரசாயனம் கலந்து காணப்பட்டது. இதற்கு காரணமான தொழிற்சாலைகளை மூடுமாறு கோரி கடந்த வாரம் முழுவதும் மக்கள் சுயமாக கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக அரசாங்கம் அரச ஆயுத படையை பயன்படுத்தி நடத்திய தாக்குதலில் சந்திரபோதி கல்லூரியில் பயின்ற 17வது மாணவன் பலியானார்.
தமது அடிப்படை உரிமைகளில் ஒன்றான சுத்தமான குடிநீரை கேட்டு போராடிய மக்கள் மீது ஆயுதம் தாங்கிய பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் பாடசாலை மாணவன் உட்பட நிராயுதபாணிகளான பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
ஜனநாயக ரீதியான தமது அடிப்படை உரிமைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ஆயுதம் தாங்கிய படையினரை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பாடசாலை மாணவனின் கொலைக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்று கொண்டு விசாரணைகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten