சின்னவத்தைக் கிராமத்தில் 30 சிங்களக் குடும்பங்களும் 380இற்கு மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். காட்டு யானைகளின் அட்டகாசத்தைத் தடுப்பதற்கு வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் மூலம் யானை வெடி வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும் அவை கிராம மக்களின் பாதுகாப்பிற்கு போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே இன்று கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா சின்னவத்தைக் கிராமத்திலுள்ள 30 சிங்களக் குடும்பங்களையும் சந்தித்து கலந்துரையாடியதோடு, மேலதிகமாக யானை வெடிகளையும் சிங்கள மக்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்தொடு 30 சிங்களக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் அவர்களது ஜீவனோபாயத்திற்கும் தாம் உதவி புரிவதாகவும் மேஜர் பேர்ட்டி பெரேரா அம்மக்களிடம உத்தரவாதம் அளித்துள்ளார்.
இவரது இந்நடவடிக்கையினால், அக்கிராமத்தில் வாழும் தமிழ் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு படுவான்கரையில் தற்போது பரவலாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், 30 சிங்களக் குடும்பங்களை மாத்திரம் தான் அபிவிருத்தி செய்யவும் அவர்களுக்கு மாத்திரம் தமது வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தினை மேற்கொள்வது குறித்து அப்பிரதேச தமிழ் மக்கள் விசனத்தையும் கவலையினையும் வெளியிட்டுள்ளனர்.
பிரதேச செயலாளர்களுக்கும் உள்ளக இடமாற்றங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர்களுக்கும் உள்ளக இடமாற்றங்கள் அடுத்தமாத ஆரம்பத்தில் இடம்பெறவள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் அதிகபட்ச சேவைக்காலம் மக்களுடனான அதீத அபிவிருத்தியின் பங்கேற்பு போன்றவற்றினைக் கருத்தில் கொண்டு இவ் இடமாற்றங்கள மேற்கொள்ளப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள படுவான்கரைப் பகுதியில் கடமையாற்றுகின்ற பிரதேச செயலாளர்கள் தற்போது கடமை புரிகின்ற பிரதேசங்களுக்கு பொறுப்பேற்று வந்து தற்பதுதான் ஒரு வருடமாகின்றன.
படுவான்கரைப் பிரதேசத்தில் தற்போது பொரும்பான்மை இனத்தவர்கள தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்புக்களை மேற்கெண்டு வருகின்றார்கள் இவற்றுக்கு எதிர் நீச்சல் போட்டு பிரதேச செயலாளர்கள் அதற்கு இடம்கொடாமல் தமது அதிகாரத்தினைப் பயன்படுத்தி சேவை செய்து வருகின்ற இந்நிலையில், இவர்களை இடம்மாற்றி படுவான்கரையில் பெரும்பான்மை இன மக்களின் குடியேற்றத்துக்கு ஒத்துழைக்கக் கூடிய பிரதேச செயலாளர்களை நியமிக்க தற்போது உள்ளார்ந்த ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
இதனிடையே ஆரையம்பதி பிரதேச செயாலாளராக கடமையாற்றிய திருமதி வாசுகி அருள்ராசா அண்மையில் பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களுடன் முரண்பட்டிருந்தார்.
மேற்படி பிரதியமைச்சர் அவரை உடன் இடம் மாற்றுமாறு மாவட்ட அரச அதிபருக்கு பணிப்பரை விடுத்தார். பின்னர் இப்பிரச்சினையினை இலகுபடுத்தும் முகமாக மேற்படி பிரதேச செயலாளருக்கு கிழக்கு மாகாண பிரதி தபால்மா அதிபர் பதவி கொடுத்து பிரதியமைச்சருக்கு பொருத்தமான வாசுதேவன் என்பவரை ஆரையம்பதிக்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெல்லாவெளி, பட்டிப்பளை வவுணதீவு கிரான், வாகரை பிரதேச செயலாளர்களை உடன் இடமாற்றம் செய்ய அரசியல் தலையீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவைகள் அனைத்தும் படுவான்கரைப பகுதி என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
Geen opmerkingen:
Een reactie posten