donderdag 6 juni 2013

அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யாது வடக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்!- வாசுதேவ நாணயக்கார

'சிலோன்' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் பிரபல நடிகர் அரவிந்த்சுவாமி
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 02:13.57 AM GMT ]
இலங்கையின் யுத்த சூழ்நிலையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'சிலோன்' என்ற திரைப்படத்தில், பிரபல நடிகர் அரவிந்த் சுவாமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குனர் சந்தோஸ் சிவத்தினால் இந்த திரைப்படம் இயக்கப்படுகிறது.  இதில் அரவிந்த் சுமாமி முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் இடம்பெற்று கொண்டிருக்கும் பகுதியில் சிக்கிக் கொள்ளும் 8 சிறுவர்கள் பற்றி கதையாக இந்த திரைப்படம் அமைகிறது.

அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யாது வடக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்!- வாசுதேவ நாணயக்கார
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 02:04.53 AM GMT ]
 அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யாது வடக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு எதிராக பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்க முழு அளவில் முயற்சி எடுக்க வேண்டும்.
13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களை மாற்றியமைக்க சிலர் முயற்சிக்கின்றனர்.
நாடு என்ற ரீதியில் ஐக்கியமாக செயற்பட அரசியலமைப்பு வழிவகை செய்துள்ளது.
மாகாணசபைகளின் ஊடாக தெற்கு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் வடக்கு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten