[ புதன்கிழமை, 05 யூன் 2013, 02:03.59 AM GMT ]
கோல்டன் கீ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சிசிலி கொத்தலாவல அவர்களின் 50 கோடி ரூபா பெறுமதியான சொத்து அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
வைப்பாளர்களுக்கு பணம் செலுத்தும் நோக்கில் இந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆயுதமின்றி முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழப் போரை படையினரால் தோற்கடிக்க முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
கோல்டன் கீ நிறுவனத்தை மூடியதனால் அதில் பணத்தை வைப்புச் செய்தவர்கள் எதிர்நோக்கிய நட்டத்தை ஈடு செய்ய இந்த சொத்துக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
செலிங்கோ குழும நிறுவனத்தின் உரிமையாளர் லலித் கொத்தலாவலயின் மனைவியான சிசிலி கொத்தலாவல தற்போது லண்டனில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு பிரித்தானிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
சிசிலி கொத்தலாவல இன்டர் போலினால் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதமின்றி முன்னெடுக்கப்பட்டு வரும் ஈழப் போரை படையினரால் தோற்கடிக்க முடியாது: விமல் வீரவன்ச
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 02:03.57 AM GMT ]
நாட்டு பொதுமக்களினால் இந்த போரைப் முறியடிக்க முடியும்.
படையினர் பல்வேறு அர்ப்பணிப்புக்களை செய்தே இந்த போரை வெற்றியீட்டினர்.
ஆயுத போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், ஈழம் தொடர்பான கருத்துக்களும் பிரச்சாரங்களும் இன்னமும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.
பிரிவினைவாதிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.
வட மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அதன் மூலம் புதிய ஈழப்போராட்டமொன்றை தொடங்க பிரிவினைவாதிகள் முயற்சிக்கின்றனர்.
தற்போதைய அரசியல் அமைப்பின் அடிப்படையில் தேர்தல் நடாத்தப்பட்டால், பிரிவினைவாதிகள் தனி இராச்சியமொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபடுவார்கள் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பிலான கையொழுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten