donderdag 6 juni 2013

வடக்கில் நீதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டுமெனில் படைகளை அகற்றுங்கள்!- அரசிடம் கோருகிறது கபே

ஈரான் மீதான தடையிலிருந்து இலங்கைக்கான விலக்களிப்பு காலம் நீடிப்பு!- அமெரிக்கா
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 06:42.19 AM GMT ]
ஈரான் மீதான தடையிலிருந்து இலங்கைக்கான விலக்களிப்பு காலத்தை அமெரிக்கா நீடித்துள்ளது. 
ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு எந்தவிதமான சலுகைகளையும் வழங்குவதில்லை என அமெரிக்கா அறிவித்திருந்தது.
சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இலங்கை, இந்தியா, சீனா போன்ற சில நாடுகளுக்கு அமெரிக்கா இந்த சலுகையை வழங்கியுள்ளது.
இதன்படி, ஈரானிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு விலக்களிக்கப்பட்ட காலம் மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
வடக்கில் நீதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டுமெனில் படைகளை அகற்றுங்கள்!- அரசிடம் கோருகிறது கபே
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 06:57.15 AM GMT ]
வடக்கில் நீதியான முறையில் மாகாணசபைத் தேர்தல் நடைபெற வேண்டுமெனில், அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்து இராணுவத்தினரை உடன் அகற்றுமாறு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் என்னும்  கபே இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான அஹமட் மனாப் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கில் 2012ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை படையினர் கோரி வருகின்றனர்.
கிராம அலுவலர்களிடம் செல்லும் படையினர் வாக்காளர் பட்டியலை வழங்குமாறு கோரி மிரட்டுகின்றனர் எனக் கூறப்படுகிறது. இது குறித்து எம்மிடம் பலர் முறையிட்டுள்ளனர்.
வடக்கில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் அங்குள்ள படைகள் அகற்றப்பட வேண்டும்.
சிவில் நடவடிக்கைகள் அனைத்தும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதன் மூலமே நீதியான தேர்தலை அங்கு நடத்த முடியும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten