சீரற்ற வானிலை தொடர்பில் மீனவ சமூகத்திற்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை!- அறிக்கை தருமாறு ஜனாதிபதி கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 01:38.39 PM GMT ]
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகத்திற்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜனாதிபதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வானிலை தொடர்பாக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 18 மீனவர்கள் அடங்களாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 36 மீனவர்கள் வரை காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வானிலை நிலையத்தின் கவனயீனமே உயிர் பலிகளுக்கான காரணம்! 18 பேர் பலி! 36 பேரை காணவில்லை - 37 படகுகள் மாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 03:20.11 AM GMT ]
இலங்கை வானிலை அவதான நிலையத்தின் கவனயீனமே பல உயிர் பலிகளுக்கான காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இலங்கையின் பல பகுதிகளிலும் நேற்று கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதன்காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டன.
கடல் சார்ந்த பிரதேசங்களில் இந்த சேதங்கள் அதிகமாக இருந்தன.
இந்தநிலையில் கடும் காற்று வீசும் என்று இலங்கையின் வானிலை அவதான நிலையம் முன்கூட்டியே அறிவிக்காமை காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்காக சென்ற 6 பேர் வரை கொல்லப்பட்டனர்.
16க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்த கடும் காற்று தொடர்பான தகவலை முன்கூட்டியே வழக்குவதில் தாமதம் ஏற்பட்டதை வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ் எச் காரியவசம் ஏற்றுக்கொண்டுள்ளார்.
வானிலை நிலையத்தில் உள்ள ராடார் தொடர்புமுறையில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்படாமையே அதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2ம் இணைப்பு
சீரற்ற காலநிலை: எட்டு பேர் பலி! 43 பேரை காணவில்லை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மீனவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 43 பேர் காணாமற்போயுள்ளனர்.
காணாமற்போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காணாமற்போனவர்களை தேடும் பணியில் இலங்கை விமானப்படையும் கடற்படையும் ஈடுபட்டுள்ளன.
3ம் இணைப்பு
காலநிலை சீற்றத்திற்கு 18 மீனவர்கள் பலி: அமைச்சர் தகவல்
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 18 மீனவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 36 மீனவர்கள் காணாமற் போயுள்ளதாக மின் பிடி மற்றும் கடல் வளத்துறை பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
காலநிலை சீர்கேட்டினால் விபத்திற்குள்ளான 37 படகுகளும் காணாமற் போயுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படகுகள் காலி, நீர்கொழும்பு, களுத்துறை மற்றும் கொழும்பிலிருந்து சென்ற படகுகள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten