[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 12:54.35 PM GMT ]
யாழ்.மாவட்ட உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் சாவகச்சேரி ஐங்கரன் மணி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட "வரி விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்' வரி தொடர்பான கருத்தரங்கு இடம்பெற்றது.
இக்கருத்தரங்கிலே இறைவரி திணைக்கள யாழ்.மாவட்டப் பிரதி ஆணையாளரிடமே அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காலத்துக்கு காலம் அரசினால் அறிவிக்கப்படும், விதிக்கப்படும் நேரடி, மறைமுக வரிகளை யாழ்.மாவட்ட மக்கள் தவறாமல் செலுத்தி வருகிறார்கள். செலுத்தப்படும் வரிகள் நாட்டின் அபிவிருத்திக்கு பெருமளவில் செலவிடப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக வடபகுதி மக்கள் வரி செலுத்தி வருகின்ற போதிலும் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அரசின் பங்களிப்பு என்ன?
நாட்டு மக்களால் செலுத்தப்படும் வரிப்பணம் பகிர்வதில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கருதுகிறோம் என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புலிகளுக்கு வரி செலுத்திய தெற்கு வர்த்தகர்கள்?
[ ஞாயிற்றுக்கிழமை, 09 யூன் 2013, 04:04.02 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வரி செலுத்திய தெற்கு வர்த்தர்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் புலிகள் செயற்பட்ட காலத்தில் இவ்வாறு தெற்கு வர்த்தகர்கள் வரி செலுத்தியுள்ளனர்.
புலிகளின் வரித் திட்டத்திற்கு அமைவாக பொருட்கள் சேவைகளை விற்பனை செய்த 93 தெற்கு வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
புலிகளினால் கோரப்படும் பொருட்களை தேவையான நேரத்தில் தேவையான இடத்திற்கு இந்த வர்த்தகர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
புலிகளின் வரி முறைமைக்கு அமைய பொருட்களுக்கு விலையிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக 400 ரூபா பெறுமதியான அஸ்பெஸ்டோஸ் சீட் ஒன்று புலிகளின் வரி 400 ரூபா சேர்த்து 800 ரூபா என விலையிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொருட்களை அனுப்பி வைக்க எட்டு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten