மலேசிய ஓட்டல் ஒன்றில் ஆள் இல்லாத இடத்தில் ஷோபா தன்னாலேயே நகர்கிறது இதை பார்த்து வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடிக்கிறார். அதே போல் சாப்பாட்டு அறையில் ஒரு இளம் பெண் மொபைல் போனில் பேசி கொண்டு இருக்கிறார் அப்போது அவருக்கு அருகில் இருக்கும் பிளாஷ்டிக் சேர் நகர்ந்து வருகிறது. இதைபார்த்து அவர் பயந்து ஒடுகிறார். பின்னர் அங்கிருந்து வெளியே செல்ல முயற்சிக்கிறார் ஆனால், சேர்களும் சாப்பாட்டு மேஜையும் சேர்ந்து அவரை மறித்து வந்து நிற்கின்றன இதை பார்த்த மாணவி அங்கும் இங்கும் ஓடி இறுதியில் மயங்கி விழுந்து விடுகிறார். இங்கு கண்ணுக்கு தெரியாத பேய் நடமாட்டமா அல்லது இளம் பெண்ணை பயமுறுத்த நண்பர்கள் செய்த செயலா என தெரியவில்லை. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
Geen opmerkingen:
Een reactie posten