[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 01:11.28 PM GMT ]
இந்த நிகழ்வானது செந்தமிழ்சொல்லருவி யாழ் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் துணைமுதல்வர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினர்களாக இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன் தம்பதிகள், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, பா.உறுப்பினர் சி.சிறீரதரன், யாழ். பல்கலைக்கழக முன்னாள் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் சிவலிங்கராசா, யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவத்துறை தலைவர் பேராசிரியர் வேல்நம்பி, தீவக வலயகல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்,
யாழ் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முதல்வர், தாவீது சதானந்தன் சொலமன் அடிகளார் முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி வெ.அரியநாயகம் தமிழருவி.த.சிவகுமாரன் கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர் மா.கணபதிப்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் வரவேற்புரையை கரைச்சி பிரதேசபை தலைவர் நாவை.குகராசா நிகழ்த்தினார்.
நாவை.குமரவேந்தனின் நூல்களை இந்தியத் துணைத்தூதர் தம்பதிகள், தா.ச.சொலமன் அடிகளார் கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.
வெளியீட்டுரை மற்றும் மதிப்பீட்டுரைகளை றோயல் கல்லூரியின் முன்னாள் பிரதிமுதல்வர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சிவலிங்கராசா, முனைவர் பேராசிரியர் வேல்நம்பி புலவர்.அ.வெ.அரியநாயகம், தமிழருவி சிவகுமாரன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன்,
மொழியாலும் பண்பாட்டாலும் பல்லாயிரம் ஆண்டுகள் பிணைப்புக் கொண்ட இந்திய- இலங்கை உறவில் அறிவு மற்றும் கலை ரீதியான தொடர்பு மிக ஆழமானது.
குறிப்பாக யாழ்ப்பாணத்து புத்திஜீவிகள் தமிழ் அறிஞர்கள் ஆய்வாளர்களுக்கும் தமிழக சமூகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு எப்போதும் இருந்து வந்துள்ளது.
இப்பொழுதும் தொடர்கின்றது. தொன்மை மொழியாக செம்மொழியாக இருக்கின்ற தமிழ்மொழிக்கு செழுமையும் புதுமையும் தந்து காத்து வருகின்றவர்கள் தமிழறிஞர்கள் தமிழ் எழுத்தாளர்கள்.
உலகத் தமிழராய்ச்சி மாநாடுகளில் உலகமெலாம் பரந்திருக்கும் பேராளர்கள் சங்கமமாவது நாம் அறிந்ததே. இந்த சங்கமத்தில் இங்கிருந்தும் காலம்காலமாக தமிழ் அறிஞர்கள் ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.
அத்தகையதொரு பண்பாட்டை தாழாமல் வைத்திருப்பதற்கு இத்தகைய நூலாசிரியர்களின் பங்கும் அதனுடாக கலக்கின்ற புத்திஜீகளின் கருத்தாடல்களும் மிக முக்கியமானது.
தமிழுக்கு ஆற்றப்படுகின்ற தொண்டுகளில் இதையும் காத்திரமானதாக கருதப்படுவதால் வாழ்த்துகின்றேன் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt6D.html
தமிழர்களின் அரசியல் நிலையை பலப்படுத்த புத்திஜீவிகள் கல்விமான்கள் முன்வரவேண்டும்:துரைராஜசிங்கம்
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2015, 02:03.23 PM GMT ]
எமது சமூகத்தின் புத்திஜீவிகள்,கல்விமான்கள் தமிழர்களின் அரசியல் நிலையை பலப்படுத்த முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதில் புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் மண்முனை மேற்கு பிரதேச மக்களால் கௌரவிக்கப்படும் நிகழ்வு மட்டக்களப்பு கன்னன்குடா கண்ணகி வித்தியாலய மண்டபத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஒரு நாட்டில் தமது உரிமைக்காகப் போராடிய இனத்தை அக்கிரமமாக சர்வதேச போரியல் பொறி முறைகளுக்கு மாறாக அதனை மீறி அந்த நாட்டின் அரசே அம்மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளுமா என்கின்ற கேள்வி எழுகின்ற வேளையில் எமது நாட்டில் அது வரலாறாகவே இடம்பெற்றிருக்கின்றது.
எமது உறவுகளை வகைதொகையின்றி காவு கொண்ட வரலாறு அது.அவ்வேளையில் எமது தலைமையும் நாமும் அப்போரினை நிறுத்துவதற்கு பலவாறு முயற்சித்தோம் ஆனால் மார்க்கம் ஏதும் இன்றி இறுதியில் அது முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது.
அதன் பின்னர் மீண்டும் மிதவாத அரசியலில் ஈடுபட நாம் ஆரம்பித்து எமது மக்கள் அவர்களின் வாக்குகளால் ஒவ்வொரு தேர்தலிலும் எம்மை பாராட்டி கௌரவித்து வருகின்றனர். இதனை விட கௌரவிப்பு எமக்கு வேறேதும் இருக்காது.
நாம் தற்போது அமைச்சர்களாக இருக்கலாம் ஆனால் நாம் எப்போதும் எமது மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்கே வருவிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில் எம்மை மக்கள் அவர்களுடன் இணைத்தே பார்க்க வேண்டும்.
எமது பிரதேசம் விவசாயத்திற்குரிய பிரதேசம். எமது பிரதேசத்தில் இருக்கும் தேவைகளை நாம் ஒவ்வொரு பிரதேசங்களாக தேடித் தேடி அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றோம்.
நாம் தற்போது வழமைக்கு மாறான அரசியல் சூழலில் இருக்கின்றோம். இக்கால கட்டத்தில் எண்ணெய் பூசப்பட்ட கத்தியைக் கொண்டு பலாப்பழம் வெட்ட எடுக்க வேண்டியவர்களாக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக அவதானமாக மேற்கொள்ள வேண்டி இருக்கின்றன.
நாம் எமது மக்களின் அபிலாசைகளை மறந்துவிட்டு எவ்வித காரியங்களையும் மேற்கொள்பவர்கள் அல்ல. என்றும் எமது மக்களை மனதில் நிறுத்தியே ஒவ்வொரு செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
இந்தப் பயணத்தில் நாம் எல்லோரும் ஒன்றாக சிந்தித்து எமது நடைமுறைகளைப் பேண வேண்டும். இன்றைய நிலையில் எமது சமுகத்தின் புத்திஜீவிகள் கல்விமான்கள் தமிழர்களின் அரசியல் நிலையை பலப்படுத்த முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தில் நாம் எல்லோரும் ஒன்றாக சிந்தித்து எமது நடைமுறைகளைப் பேண வேண்டும். இன்றைய நிலையில் எமது சமுகத்தின் புத்திஜீவிகள் கல்விமான்கள் தமிழர்களின் அரசியல் நிலையை பலப்படுத்த முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
கன்னன்குடா கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கே.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மண்முனை மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETcSUkt6E.html
Geen opmerkingen:
Een reactie posten