தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 maart 2015

கடற்பரப்பை பகிர்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா? - விமல் வீரவன்ச கேள்வி



மூவின மக்களுக்கும் சமமாக சேவைகள் பகிர்ந்தளிக்கப்படும்! கிழக்கு மாகாண முதலமைச்சர்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 04:12.02 PM GMT ]
கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் முதலமைச்சரை சந்தித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது அம்மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற வாழ்வாதாரப் பிரச்சனைகளை முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினர்.
இதனை கவனத்தில் எடுத்த முதலமைச்சர் இக் கிழக்குமாகாண தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்த்து எதிர்கால வாழ்வினை வளம் பெறச் செய்வதே எனது நோக்கமும் சேவையுமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
எவருக்கும் பாரபட்சமின்றி சமமாக சகல சேவைகளும் பகிர்ந்தளிக்கப்படுமென இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் உறுதியாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo6J.html

கடற்பரப்பை பகிர்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா? - விமல் வீரவன்ச கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 04:15.10 PM GMT ]
பொது தேர்தலின் பின்னர், வடக்கு கடற்பரப்பை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா? என தேசிய சுதந்திர முன்னணி இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதன் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நியமிப்பதற்காக, எதிர்வரும் ஆறாம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு தொடர்பாகவே இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாது, நாட்டையே ஏமாற்றியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய, முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அரசாங்கம் காலனித்துவ தன்மையுடன் தமக்கேற்ற வகையில் செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo7A.html

Geen opmerkingen:

Een reactie posten