தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 maart 2015

“அகதிகளே….ஜேர்மனியை விட்டு வெளியேறுங்கள்”:’பெகிடா’ அமைப்பினர் விடுத்த எச்சரிக்கையால் பரபரப்பு

பெகிடா அமைப்பு சார்பாக நடைபெற்ற ஊர்வலத்தில் அகதிகளை நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி போராட்டக்காரர்கள் எழுப்பிய கோஷங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்லாமயமாக்குதல் கொள்கைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் ‘பெகிடா’(Pegida) அமைப்பு, ஜேர்மனியின் ட்ரெஸ்டன்(Dresden) நகரில் கடந்த செவ்வாய்கிழமையன்று ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தது.
Neumarkt பகுதியிலிருந்து Theaterplatz என்ற இடத்தை நோக்கி நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுமார் 6,200 பெகிடா ஆதரவாளர்கள் ‘ஜேர்மனி நாடு ஜேர்மனியர்களுக்கு மட்டுமே சொந்தமாகும். அகதிகளே வெளியேறுங்கள் என அகதிகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.
பெகிடா அமைப்பிற்கு எதிராக திரண்ட சுமார் 500 அகதிகள் ஆதரவாளர்கள், ‘ட்ரெஸ்டன் எல்லோருக்கும் சொந்தமானது. ட்ரெஸ்டன் நாசிச கொள்கைகள் இல்லாத நகரம்’ என கோஷமிட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கு இடையில் சிறிது நேரம் வாக்குவாத மோதல் ஏற்பட்டது.
இரண்டு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால், சுமார் 300 பொலிசார்களை காவல்துறை வன்முறை கட்டுப்பாட்டு பணியில் அமர்த்தியிருந்தது.
பெகிடா அமைப்பினருக்கும், அகதிகள் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பொலிசார் நீண்ட வரிசையில் மனித சங்கலி ஒன்றை அமைத்து வன்முறை நிகழாதவாறு கட்டுப்படுத்தினர்.
இருப்பினும், இருத்தரப்பினரும் பட்டாசுகளையும், கண்ணாடி பாட்டில்களையும் ஒருவருக்கொருவர் மீது வீசி தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
அகதிகளின் ஆதரவாளர்களில் ஒருவரான Markus Klee என்பவர் கூறுகையில், ஊர்வலத்தில் இருதரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டதால் அங்கு அசாதரண சூழ்நிலையே இருந்தது.
ஊர்வலத்தில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசிய பொலிசார், கூட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் சிறிது நேரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten