maandag 2 februari 2015

ஆட்சி மாற்றத்தின் பின் தமிழர்களின் மனநிலை என்ன? கருணாநிதியிடம் வேலாயுதம் விளக்கம்

நிஷா பிஸ்வால் இலங்கை வந்தடைந்துள்ளார்!
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 04:37.58 AM GMT ]
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான, அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிரதி உதவி இராஜாங்க செயலாளர் அதுல் கெஷாப்பும் இந்த பயணத்தில் இணைந்து கொண்டுள்ளார். நிஷா பிஸ்வால் மூன்று நாள் விஜயம் மேற்கொள்வதற்காக கடந்த சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எப்படியிருப்பினும் விஜயம் பிற்போடப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. நாளை வரை நாட்டில் தங்கியிருக்கும் உதவி இராஜாங்க செயலாளர், இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிவில் சமூகத்தினர் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளையும் அமெரிக்க பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். தேசிய தேர்தல் ஒன்று நடைபெற்றதன் பின்னர் இராஜாங்க செயலாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றமை இதுவே முதல் தடவை என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTWKdnp6.html

சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த இருவர் கைது
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 04:01.36 AM GMT ]
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பிரதேசத்தில் சட்ட விரோதமாக துப்பாக்கி ஒன்று வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 44 வயதுடைய அக்கராயன்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யபட்டவரின் துப்பாக்கி மருந்து நிரப்பப்பட்ட துப்பாக்கி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடுவல நவகமுவ பிரதேசத்தில் கைகுண்டு ஒன்று வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்ட்டவர் 30 வயதுடைய கடுவல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த கைகுண்டு வெளிநாடுகளில் தயாரிக்கப்படுவது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சரத் என் சில்வாவுக்கு எதிராக முறைபாடு!
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 04:23.45 AM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட சிலர் வடக்கு கட்டான, கங்காராம தியான மத்திய நிலைய வளாகத்தில் சட்டவிரோதமாக மரம் வெட்டியதாக குறித்த நிலையத்தின் பொறுப்பாளரான தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தியான மத்திய நிலையத்தின் பொறுப்பாளரான கொஸ்கொட சமதசீலி தேரர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிடம் வினவிய போது அதற்கு பதிலளித்த அவர், குறித்த காணி தமக்கு சொந்தமானது என தெரிவித்தார்.


ஆட்சி மாற்றத்தின் பின் தமிழர்களின் மனநிலை என்ன? கருணாநிதியிடம் வேலாயுதம் விளக்கம்
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 03:45.43 AM GMT ]
இந்தியா சென்றுள்ள பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதத்திற்கும் திமுக தலைவர் மு.கருணாநிதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேற்று மாலை 6 மணிக்கு கோபாலபுரத்தில் அமைச்சர் சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்திப்பின் பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் வேலாயுதம்,
தி.மு.க. தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போது உள்ள அரசியல் மாற்றம் குறித்தும், அரசியல் சூழ்நிலை குறித்தும், தமிழ் மக்களின் நிலை குறித்தும் கருணாநிதியிடம் எடுத்து கூறினேன்.
ராஜபக்ச மீதான போர்க் குற்றம் குறித்து இலங்கை அளவில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
முகாம்களில் உள்ள தமிழர்கள் மீண்டும் அவர்கள் வாழ்விடத்திற்கு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். மேலும் இராணுவம் அதிகம் உள்ள முகாம்களில் இருந்து இராணுவத்தினர் திரும்ப பெறப்படுவார்கள்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தமிழர்களுக்கு வேலை வழங்கி வருகிறோம். அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
பாடசாலைகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம். மலைவாழ் தமிழர்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
உலகம் முழுவதும் இலங்கை அகதிகள் என்ற வார்த்தை இருக்க கூடாது என்று விரும்புகிறோம். எனவே மற்ற நாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும்.
இலங்கையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. அவர்கள் நிம்மதியாக வாழலாம். விருப்பம் உள்ளவர்கள் வரலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
விரைவில் நாங்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து பேச இருக்கிறோம். அதற்கு நாங்கள் நேரம் கேட்டு இருக்கிறோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTWKdnp1.html

Geen opmerkingen:

Een reactie posten