maandag 2 februari 2015

புதிய அரசில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் நிரந்தமாகும் : ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு

ஜோன் அமரதுங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்: தேசிய சுதந்திர முன்னணி
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 06:24.54 AM GMT ]
சட்டம், ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி வாக்குறுதியை மீறி அமைச்சர் ஜோன் அமரதுங்க, வத்தளை பிரதேச சபைக்குள் பிரவேசித்து இரும்பு பொல்லு ஆட்சிக்கு தயாரானதாகவும் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
வத்தளை பிரதேச சபையின் ஆளும் கட்சிக்கு மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர். ஆனால், நாடாளுமன்றத்தில் 49 உறுப்பினர்களை கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரதமர் பதவியும் அமைச்சர் பதவிகளும் ஜனநாயக ரீதியாக கிடைக்கவில்லை.
மக்களின் விருப்பத்திற்கு அமைய அந்த கட்சிக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை எனவும் தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு சட்ட உதவி வழங்கும் நாமல்
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 06:05.41 AM GMT ]
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் பழிவாங்கல் மற்றும் தேர்தல் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவியை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல், தேர்தல் வன்முறைகளில் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் குறித்து தேடி அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுக்க நாமல் ராஜபக்ஷ ஏற்பாடுகளை செய்துள்ளார்.
வன்முறை மற்றும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை தனது அலுவலகத்திற்கு தாமதமின்றி அறிவிக்குமாறும் அவர் கோரிக்கையை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற தடை!
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 06:16.47 AM GMT ]
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் கடவுச்சீட்டை கைப்பற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர், கடந்த 2006ஆம் ஆண்டில் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 107 ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையிலேயே, அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு அவ்வாணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைக்கு இணங்கவே கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவினால் அவரது கடவுச்சீட்டை கைப்பற்றுமாறு உத்தரவிடப்பட்டது.

புதிய அரசில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் நிரந்தமாகும் : ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 05:59.18 AM GMT ]
இலங்கை ஊடகவியலாளர்கள் தமது தொழிலை சுதந்திரமாக செய்யவும் அந்த சுதந்திரத்தை ஸ்திரமானதாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழுவின் பணிப்பாளர் ஜோயேல் சீமோன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் ஊடக சுதந்திரத்திற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நிரந்தர தொழில் சுதந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் ஜோயேல் சீமோன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTWKdnq2.html

Geen opmerkingen:

Een reactie posten