donderdag 18 december 2014

மைதிரியுடன் வெளியேறிய துமிந்த திசாநாயக்கவின் தீவிர ஆதரவாளர் சடலாமாக மீட்ப!

வீரவன்ஸவின் மற்றுமொரு தொகுதி அமைப்பாளர் மைத்திரி பக்கம் தாவினார்
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 10:21.48 AM GMT ]
அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணியின் மற்றுமொரு தொகுதி அமைப்பாளர் எதிரணியில் இணைந்து கொண்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் அக்மீமன தொகுதியின் அமைப்பாளரான சட்டத்தரணி மஹேஷ் மடவல, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக காலியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரித்தார்.
சட்டமும், சட்டத்தின் ஆட்சியும் பாரதூரமான நெருக்கடியை சந்திதுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அதனை பாதுகாப்பார் என நம்பக் கூடியவர் என்பது மாத்திரமல்லாது நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடியவர் என நம்பும் வேட்பாளருக்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தொகுதி அமைப்பாளர் என்ற வகையில் தான் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு அமைய இருந்தாலும் தற்போது கட்சி சர்வாதிகார தலைவருக்கு ஆதரவாக செயற்படுவதன் காரணமாக கட்சியில் இருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் மஹேஷ் மடவல குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalty.html


மைதிரியுடன் வெளியேறிய துமிந்த திசாநாயக்கவின் தீவிர ஆதரவாளர் சடலாமாக மீட்ப!
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 10:28.12 AM GMT ]
அண்மையில் ஆளும் தரப்பில் இருந்து வெளியேறி பொது வேட்பாளருடன் இணைந்துகொண்ட துமிந்த திசாநாயக்கவின் தீவிர ஆதரவாளர் நிஹால் என்பவர் ராஜாங்கனை பகுதியில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிஹால் ரத்னாயக்க எனும் மூன்று குழந்தைகளின் தந்தையான இவர், கடந்த 17ஆம் திகதி கண்டி பொலிஸார் எனக் கூறிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் லுணு ஓய ஆற்றில் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKaltz.html

Geen opmerkingen:

Een reactie posten