[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 04:44.53 PM GMT ]
நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தின் நிதி ஒதுக்கீடு தொடர்பில் குழுநிலை விவாதம் இடம்பெற விருந்த நிலையில் ஆளுநரின் செயலாளர் சபையில் இருக்கவில்லை
எனவே செயலாளர்கள் சபையில் இல்லாமல் குழுநிலை விவாதம் சாத்தியமற்றது என எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சி யினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஆளுநரின் செயலாளர் சபைக்கு அழைக்கப்பட்டு பின்னர் விடயம் குழுநிலை விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் செயலகத்தின் கீழ் உள்ள ஆளுநர் பங்களாக்கள் எத்தனை? ஊழியர்கள் எத்தனை? என ஆளுநரின் செயலாளரிடம் சபையில் கேள்வி எழுப்பப்பட்டு செயலாளர் பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தனிப்பட்ட ஆளணி 95 உள்ளதாகவும், மேலம் சில தகவல்களையும் சபைக்கு சமர்ப்பித்தார். செயலாளரின் பதிலை தொடர்ந்து மீள கேள்வி எழுப்பிய முதலமைச்சர் குறித்த ஆளணி வடமாகாண சபை அமைக்கப்படுவதற்கு முன்னதாகவே இருந்ததா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆம் என செயலாளர் பதிலளித்தார். இதனை தொடர்ந்து ஆளுநருக்கு எத்தனை பங்களாக்கள் உள்ளன? என கூட்டமைப்பின் உறுப்பினர் செயலாளரிடம் வினவினார்.
அதற்கு இரு பங்களாக்கள் இருக்கின்றன. அவை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டவை என செயலாளர் பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து சபையில் செயலாளர் மீது கேள்வி கேட்க முடியாதென, அவைத்தலைவர் அறிவுறுத்தியதை தொடர்ந்து குழுநிலை விவாதம் தொடர்ந்தது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.சர்வேஷ்வரன் தமிழகத்தில் உள்ள ஆளுநர் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக ஒன்றை மட்டுமே வைத்திருக்கின்றார்.
ஆனால் வடக்கில் ஆளுநருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பங்களாக்கள் உள்ளன. இவை எதற்காக? என கேள்வி எழுப்பியதுடன், வரவுசெலவு திட்டத்தின் நிதி போதாதென நாம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் மாவட்டங்கள் தோறும் ஆளுநர் தனது ஆணையாளர்களை நியமிப்பதற்கும், பங்காளக்களை பராமரிப்பதற்கும் நாங்கள் எவ்வாறு பணம் வழங்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
அத்துடன், ஆளுநர் என்பவர் மக்கள் பிரதிநிதி அல்ல. அவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரு உத்தியோகஸ்த்தர். ஆனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் பிரமாண அடிப்படையிலான கொடுப்பனவு 60 லட்சம் ரூபா ஆளுநருக்கு எவ்வாறு ஒதுக்கப்பட்டது? எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,
ஆளுநருக்கு நிதி வழங்குவதை நாங்கள் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. மேலும் ஆளுநருக்கு மாவட்டங்கள் தோறும் இணைப்பாளர்கள் அல்லது ஆணையாளர்கள் இருக்க முடியாது.
எனவே இந்த விடயத்தை சபையில் வாக்கெடுப்பிற்கு விடுங்கள் எனக்கோரிக்கை விடுத்தார்.
அதேபோன்ற கருத்தினை மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் திருமதி அனந்தி சசிதரன், விந்தன் மேலும் கல்வியமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நிதியினையும், பிரமாண அடிப்படையிலான கொடுப்பனவுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். என சபையில் கடுமையான எதிர்ப்பு காட்டப்பட்டது.
இதனையடுத்து ஒரு மனதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்கள் கோரும் இரு திருத்தங்களுடன் குறித்த நிதி ஒதுக்கீட்டை தாம் அங்கீகரிப்பதாக சபைக்கு தெரிவித்தனர்.
அந்த திருத்தங்கள் என்னவென்றால், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் 60லட்சம் ரூபா நிதி ஆளுநருக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது. அது நிறுத்தப்பட வேண்டும்.
மேலும் ஆளுநரின் ஆளணிகள் 3 வகையாகின்றன அதாவது தனிப்பட்ட ஆளணி, அலுவலக ஆளணி மற்றும் ஆளுநரினால் 5 மாவட்டங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணையாளர்கள் என பிரிக்கப்படுகின்றது.
இதில் 5 மாவட்டங்களிலுமாக சுமார் 27 ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.ஆளுநர் அமைச்சர்களை மீறி ஆணையாளர்களை நியமித்து செயற்பட முடியாது.
அதிலும் குறிப்பாக வடமாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்னர் அவ்வாறு இயங்க முடியாது.
எனவே எம்.எஸ். டி (முகாமைத்துவ சேவை திணைக்களம்) அதனுடன் பேசி மற்றய மாகாணங்களில் ஆளுநருக்கு என்ன ஆளணி ஒதுக்கீடு உள்ளது என்பதை அறிவது,இந்த இரு திருத்தங்களும் செய்யப்பட்டால் சபையில் முழுமையான அங்கீகாரம் வழங்கப்படும் என திருத்தங்களுடன் குறித்த நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் நேற்று விதிக்கப்பட்ட திருத்தங்களை செய்யாமல் ஆளுநருக்கு நிதி ஒதுக்க அங்கீகாரம் வழங்கப் போவதில்லை.
என உறுப்பினர்கள் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளது.
என உறுப்பினர்கள் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCScKalu7.html
ஆளும் கட்சி உறுப்பினர்கள் படுக்கையறை தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்: ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 05:02.15 PM GMT ]
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிவிடுவர் என்ற அச்சத்தில் அவர்களின் வீடுகளில் கண்காணிப்பு செய்மதிகளை அரசாங்கம் பொருத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அநுரதப்புர நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
அரசாங்கத்தில் இருந்து கட்சிமாறுவோரை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தகவல் வெளியிட்ட நிலையிலேயே ஹரிசனின் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது படுக்கையறை தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஏனெனில் படுக்கை அறையில் வைத்தே முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்பதை அரசாங்கம் அறிந்துள்ளமையால் அவற்றிலும் தமது செய்மதி கண்காணிப்புக்களை மேற்கொள்ளலாம் என்று ஹரிசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalvz.html
கேட்ட நிதியினை மத்திய அரசாங்கம் வழங்கவில்லை! மிகுந்த நெருக்கடிக்குள் வடமாகாணசபை!- சீ.வி
[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 04:27.33 PM GMT ]
2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 2ம் நாள் அமர்வு இன்றைய தினம் இடம்பெற்ற நி லையில் குறித்த அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
அமர்வில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் எனது அமைச்சின் கீழ் உள்ள துறைகளுக்காக சுமார் 1499.5 மில்லியன் ரூபா நிதியினை கோரியிருந்தோம். ஆனால் நிதி ஆணைக்குழு எமக்கு கொடுத்திருக்கும் தொகையானது 272 மில்லியன் ரூபாய் மட்டுமே.
இந்த நிதியை கொண்டு 2015ம் ஆண்டுக்கான செயற்பாடுகள், மிகுந்த நெருக்குவாரங்களை கொடுக்கப் போகின்றது. ஆனாலும் 2014ம் ஆண்டை விடவும் அதிகளவு வினைத்திறனுடன் எங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
குறிப்பாக நாங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் வீதி அபிவிருத்திக்கு 770 மில்லியன் ரூபாய் நிதியினை கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் 74மில்லியன் ரூபா நிதியினை மட்டுமே கொடுத்திருக்கின்றார்கள்.
இதேபோன்று போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு வீடமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதியை கேட்டிருந்தோம். அவர்கள் 5மில்லியன் ரூபாய் நிதியை கொடுத்திருக் கின்றார்கள்.
ஆனால் நாங்கள் கேட்காமலேயே வாராந்த சந்தை, சமூக நீர்வழங்கல், மயானங்கள் விருத்தி, மற்றும் தகமை விருத்திக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு 54 மில்லின் ரூபா நிதியினை கொடுத்திருக்கின்றார்கள்.
ஆனால் முன்னுரிமை அடிப்படையில் நாம் கோரிய நிதியினை மட்டும் அவர்கள் வழங்கவில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalu6.html
Geen opmerkingen:
Een reactie posten