woensdag 17 december 2014

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்பதா? - குஷ்பு வீடு நாளை முற்றுகை!


தாயும் மகளும் தூங்கிக் கொண்டிருந்த போது குடிசைக்கு தீவைப்பு! ஏறாவூரில் சம்பவம்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 08:23.10 AM GMT ]
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் ரூபி கிராமத்தில் குடிசையொன்றுக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை இந்த தீவைப்பு இடம்பெற்றதாக அந்தக் குடிசையில் வசித்து வந்த அதன் உரிமையாளர் முஹம்மத் ஹஸன் பாத்தும்மா (வயது 53), பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் குடிசை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதோடு வீட்டுப் பாவனைப் பொருட்கள், உடமைகள் மற்றும் தொழில் உபகரணங்கள் என்பனவும் எரிந்துள்ளதாக வீட்டார்கள் தெரிவித்தனர்.
இக் குடிசைக்குத் தீ வைக்கும் வேளையில் தாயும் மகளுமாக இருவரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு சென்ற இனம் தெரியாத நபர்கள் இருவர் குடிசைக்கு தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
தனது காணியை அடாத்தாகக் கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஒரு நபராலேயேதான் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வந்திருப்பதாகவும் ஏற்கனவே இரு தடவைகள் தனது குடிசை சேதப்படுத்தப்பட்டதாகவும் தனது வளவில் பயிரிடப்பட்டிருந்த பயன்தரும் பயிர்கள் அவ்வப்போது அழிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் பாதிக்கப்பட்ட தாயான பாத்தும்மா ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamv6.html


தமிழக அரசின் தீர்மானம்! மகிழ்ச்சியில் இலங்கை
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 08:52.43 AM GMT ]
இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் விடுவிக்க தமிழக அரசு மேற்கொண்ட தீர்மானம் குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் வெளியிட்டுள்ளது.
18வது சார்க் மாநாட்டின் போது இடம்பெற்ற சந்திப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்தநிலையில் தமிழகச் சிறைகளில் இருக்கும் இலங்கை மீனவர்கள் 30 பேரும் அவர்களின் 19 படகுகளுடன் டிசம்பர் 22ம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில்,
கடந்த டிசம்பர் 1ம் திகதி, 11ம் திகதிகளில் வெளியுறவுத் துறைச் செயலர் தமிழகத் தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கைச் சிறைகளில் இருக்கும் 66 தமிழக மீனவர்களை விடுவிக்க ஏதுவாக தமிழகச் சிறைகளில் இருக்கும் 30 இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டுமென கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களில், இந்திய அரசும் இலங்கை அரசும் ஒரே நேரத்தில் மீனவர்களை விடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தமிழக அரசு ஒத்துழைத்து வந்துள்ளது என்றும் ஆனால், இந்த முறை, இலங்கை மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது என்றும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இருதரப்பும் ஒரே நேரத்தில் மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென இலங்கை அரசிடம் மத்திய அரசு வற்புறுத்தியிருக்க வேண்டும்.
இப்போது அந்த வாய்ப்பு இல்லாத சூழலில் கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்குவதால், பெருந்தன்மையுடனும் மனித நேய அடிப்படையிலும் இலங்கை மீனவர்கள் 30 பேரை டிசம்பர் 22ம் திகதி விடுவிக்கவிருப்பதாக முதலமைச்சர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், இலங்கைச் சிறைகளிலிருக்கும் தமிழக மீனவர்கள் 66 பேரையும் அவர்களது 81 படகுகளையும் விடுவிப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டுமென பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamwy.html


அமைச்சர்களுக்கு பணத்தை கொடுத்து தடுத்து நிறுத்த முயற்சி: முன்னாள் ஜனாதிபதி
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 09:23.42 AM GMT ]
அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவார்கள் என்று நினைக்கும் அமைச்சர்களின் வீடுகளுக்கு செல்லும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் 4 முதல் 5 மணிநேரம் வரை பேச்சுவார்த்தைகளை நடத்தி பெருந்தொகை பணத்தை கொடுத்து அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அப்படி செய்தும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாமல் போகும் பட்சத்தில் அச்சுறுத்தி, வன்முறையை பயன்படுத்தி அவர்களை பயமுறுத்தி வருகின்றனர்.
எப்படியான தடையாக இருந்தாலும் அதனையும் தாண்டி எதிர்வரும் நாட்களில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க மேலும் சிலர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamwz.html


விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்பதா? - குஷ்பு வீடு நாளை முற்றுகை
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 09:28.23 AM GMT ]
அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான், நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு கருத்து கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை குஷ்பு வீட்டை முற்றுகையிடப்போவதாக தமிழர் முன்னேற்றப்படை அறிவித்துள்ளது.
இந்த கருத்தை தமிழகத்தில் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருசில நாட்களில் மறந்துவிட்டனர்.

ஆனால் வெளிநாட்டு தமிழர்கள் மறக்க தயாராக இல்லையாம். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக இரகசியமாக அதிரடி வேலை ஒன்றை செய்து வருகின்றனராம்.
குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்கி வரும் 'ஆம்பள' படத்தை தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ரிலீஸ் செய்ய விடக்கூடாது என்றும் அதையும் மீறி ரிலீஸ் செய்தால் தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
குஷ்புவின் இந்த தேவையில்லாத சர்ச்சை பேச்சால் சுந்தர் சி மற்றும் விஷாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் என்ற முறையில் விஷால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது இப்படி இருக்க, தமிழகத்தில் குஷ்புவிற்கு எதிராக களம் இறங்கியுள்ளனர் தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பினர்.
நடிகை குஷ்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று கூறியதை கண்டிக்கும் விதமாக நாளை வியாழக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு பட்டிணபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லீத் கேஸ்டல் சாலையில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை தமிழர் முன்னேற்றப் படையினர் அதன் தலைவர் கி.வீரலட்சுமி தலைமையில் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamw0.html

Geen opmerkingen:

Een reactie posten