பொன்சேகாவின் மகளை விட்டார் மருமகன்…
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆயுதக் கொள்வனவு மேற்கொள்ளப்பட்ட போது தானுன மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது. வழக்குத் தொடரப்பட்டதனைத் தொடர்ந்து தானுன மிக நீண்ட காலகமாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
பாரியளவில் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்டதாக அரசாங்கத்தினால் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றில் ஆஜராகிய சில நிமிடங்களில் பிணை வழங்கப்பட்டமை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் கிரிக்கட் வீரர் ஹசான் திலகரட்னவின் மிக நெருங்கிய உறவினரே தானுன என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் தானுன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு தேர்தலில் ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது இதேவேளை, தானுன திலகரட்ன சரத் பொன்சேகாவின் மகளுடன் பேணி வந்த திருமண பந்தத்தை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் முறித்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் ஆஜராகிய காரணத்தினால் விரைவில் சட்ட ரீதியாக விவாகரத்து கோரி இருவரும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சரத் பொன்சேகா கைது செய்பய்பட்டது முதல் தானுன தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிய ஆயுதக் கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்டு நீண்ட காலம் தலைமறைவாக வாழ்ந்து வரும் நபர் ஒருவருக்கு நீதிமன்றம் எந்த அடிப்படையில் உடனடியாக பிணை வழங்கியது என சில தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜரான தானுனவிற்கு நான்கு லட்ச ரூபா ரொக்கம் மற்றும் 50 லட்ச ரூபா இரண்டு சரீர பிணை அடிப்படையில், நீதவான் பிணை வழங்கியுள்ளார்.


http://www.jvpnews.com/srilanka/90946.html
ஆளுமையின்றி திக்கு முக்காடும் ஹகீம்…
இந்த நிலை எதனால்? சிலர் அரசியல் சாணக்கியத்தின் வெளிப்பாடு எனக் கூறுகின்றனர்.ஒரு கூட்டம் நடை பெற்றால் ஓராயிரம் பிளவுகள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே ஏற்படுகிறது.ஒவ்வொரு கூட்டமும் கட்சி அங்கத்தவர்களிடையே பல்வேறு விதமான மனக் கசப்புகளை ஏற்படுத்துகிறது.நிலைமை இவ்வாறிருக்க இதனை அரசியல் சாணக்கியத்தின் வெளிப்பாடாக ஏற்க முடியாது என்றே கூற வேண்டும்.
எனினும்,ஆளும் கட்சியில் இருந்து இன்னும் கட்சித் தாவல்கள் அதிகரித்தால் ஜனாதிபதியின் வெற்றி நிச்சயம் கேள்விக் குறியாகும்.அதே வேளை எதிர்க் கூட்டணியை கிறங்கடிக்கும் வகையில் எதிர்க் கூட்டணியில் இருந்தும் கட்சித் தாவல்கள் இடம் பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது.கட்சித் தாவல்கள் இன்னும் ஓய வில்லை.ஒரு நடு நிலைமையான கட்சி தனது பயணப் பாதையினைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் இது தான் இறுதி மாற்றம் என்ற நிலைமையும் தற்போதைய அரசியல் அரங்கில் உருவாக்கப்படவில்லை.
உண்மையில் அரசினை மு.கா ஆதரிக்க விளைவதன் நோக்கத்தில் பிரதானமானது இருமுறை தங்கள் ஆதரவின்று வெற்றி பெற்ற அரசு இம்முறையும் வெற்றி பெற்றால் தங்களது நிலை என்னவாகும்? தாங்கள் வழி நடாத்திய மக்களினது நிலை என்னவாகும்? என்ற அச்சம் எனலாம்.
அரசு தோல்வியடையும் என்பதற்கான தகுந்த முற்றுப்புள்ளி இது வரையும் வைக்கப்படவில்லை. கட்சிகளினது தேர்தல் விஞ்சாபனங்கள் கூட இன்னும் வெளியிடப்படவில்லை.அப்படிப் பார்க்கும் போது மு.கா கூட்டங்கள் கூட்டி ஒரு முடிவிற்கு வர முடியாது இருப்பதற்கு காரணம் பல இருந்தாலும் காலம் தாழ்த்துவதில் நன்மையும் இருக்கத் தான் செய்கிறது.
தேர்தல் திகதி நெருங்குவதே மக்களும்,கட்சிகளும் மு.கா இனை அவசரமாக முடிவெடுக்க வலியுறுத்த காரணம் எனலாம்.தேர்தல் திகதி நெருங்குவது போன்று தோன்ற தேர்தலிற்கு ஒரு மாத கால அவகாசம் மாத்திரம் வழங்கப்பட்டமையும் ஒரு காரணம் ஆகும்.
தேர்தல் காலம் நெருக்கப்பட்டாலும்,எட்டாக் கனி என பலரினாலும் வர்ணிக்கப் பட்ட பொது வேட்பாளராய் யாரை ஆதரிப்பது? என்பதில் எதிர்க்கூட்டனிகள் சிறிதேனும் சேதாரம் இன்றி தனது முடிகளை எடுத்து விட்டன.இதில் எத்தனை கட்சிகள்,அமைப்புக்கள் உள்ளன..?
த.தே.கூ தனது முடிவினை வெளிப்படுத்தாத போதும் மு.கா இனைப் போன்று கூட்டங்கள் கூட்டி கலையாது இருப்பதனை வைத்துப் பார்க்கும் போது அரசியல் காய் நகர்த்தலுக்காய் முடிவெடுத்து மௌனித்திருக்கின்றது என்ற முடிவிற்கே வரலாம்.இதில் எத்தனை கட்சிகள் உள்ளன..? அவ்வாறே ஜாதிக ஹெல உருமய தனது நிலைப்பாட்டை மிகப் பாரிய மாற்றத்துடன் தீர்மானித்து விட்டது.யாவரும் ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் தங்களுக்குரிய பயணப் பாதையை அமைத்துள்ள போதும் மு.கா இற்கு மாத்திரம் ஏன் இத்தனை யோசனை? என்பது சற்று சிந்திக்கத் தூண்டுகிறது.
மு.கா தலமைத்துவத்தினால் தனது கட்சியினை சரியான கட்டுப் கோப்பினுள் வைத்திருக்க முடியாத நிலையும் முடிவுகள் எட்டப் படாது கூட்டங்கள் கூட்டி கலைக்கப்படுவதற்கான ஒரு காரணமாக குறிப்பிடலாம்.மர்ஹூம் அஸ்ரபின் மரணத்தைத் தொடர்ந்து கட்சியின் தலமைத்துவத்துவத்தினைப் பெறுப்பேற்ற ரவூப் ஹக்கீமினால் அப்போது பல தலைமைத்துவங்கள் உருவெடுத்ததன் விளைவால் கட்சியினை முற்று முழுதாக தனது கட்டுக் கோப்பினுள் கொண்டு வர முடியாத ஓர் நிலை இருந்தது.
மு.கா தலைவர் கட்சி உறுப்பினர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.உறுப்பினர்களை வைத்து கட்சியினை மீளக் கட்டமைக்க வேண்டிய ஒரு நிலை இருந்தது.
இவ் அரவணைப்பை தவறுதலாக பயன்படுத்தி தனது பக்கம் கட்சியினை இழுத்துச் செல்ல பல உறுப்பினர்கள் முனைந்தார்கள். கம்பெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காறன் போன்று மு.கா தலைவரைப் புறக்கணித்து பலரும் வேட்டைக்கு கிளம்பியுள்ளமையும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய எந்த விடயமாக இருந்தாலும் சரி ஒருவர் தண்ணிக்கும் இன்னுமொருவர் தவிட்டிக்கும் இழுக்கும் நிலைக்கு வித்திட்ட காரணி இது எனலாம்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான மு.கா கட்சி பல வருடமாய் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்தமையினால் சரியான பாராளுமன்றப் பதவிக்கான சுக போகங்களை அனுபவித்துக் கொள்ள முடியவில்லை.அரசும் மிகப் பலமிக்கதாக இருந்தமையினால் மு.கா இனை ஒரு பொருட்டாகவும் மதிக்க வில்லை.எனினும்,அரசியலமைப்பினை மாற்ற வேண்டிய தேவையினை அரசு உணர்ந்த போது மு.கா இன் உதவி அரசிற்கு தேவைப்பட்டது.
இந் நேரத்தில் பதவி ஆசை காரணமாக சிலர் மு.கா தலைமைத்துவத்தினைப் புறக்கணித்து அரசுடன் இணைந்து விடுவார்கள் என்ற நிலை தோற்றம் பெற்றது.இதனை கட்சி எதிர் கொள்ள உறுப்பினர்களால் ஆளும் கட்சிக்கு மாற வேண்டிய நிலைக்கு தலைமைத்துவம் தள்ளப்பட்டது.ஆளும் கட்சிக்கு மாறியவுடன் கட்சிக்கென்று குறித்த பதவிகள் சில ஒதுக்கப்பட்டன.
அவ் ஒதுக்களினால் அனைவரினையும் கட்சியினால் திருப்திப்படுத்த முடியாது போனது.அப்படியானால் கட்சி மாறியதால் தனக்கென்ன இலாபம்? என சிலர் அரசாங்க நேரடித் தொடர்புகளின் மூலம் பதவிகளைப் பெற முயற்சித்தனர், பெற்றனர்.மு.கா தலைவர் இச் செயல்கள் மூலம் பகிரங்கமாக அவமானப்படுத்தப் பட்டார் என்றே கூற வேண்டும்.மு.கா உண்மையில் தலைமைத்துவத்தின் அதீத கட்டுப் பாட்டில் இருந்திருப்பின் இதற்கு பாரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளினை செய்திருக்கும்மு.கா .எதுவுமே செய்ததாக அறிய முடியவில்லை.
இவ் இடத்தில் சரியான நிலைப்பாட்டை விளக்கிய முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீன் மர்ஹூம் அஸ்ரபினை
இவ் இடத்தில் சரியான நிலைப்பாட்டை விளக்கிய முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீன் மர்ஹூம் அஸ்ரபினை
அவமதித்ததற்காக கட்சியினை விட்டு தூக்கி எறியப்பட்டார் என்ற மர்ஹூம் அஸ்ரப் தலைமையிலான வரலாறுகளை நினைவு கூறுவது பொருத்தமாக அமையும் என நம்புகிறேன். பல கட்சிகளினை சின்னா பின்னாமாக்கிய அரசிற்கு இவைகள் உகப்பான செய்தியாய் அமைந்தது.மு.கா சிதைக்க முயற்சித்த வேளை தலைவரின் சாணக்கியம் கொண்டு பல தடவைகள் அது முறியடிக்கப்பட்டது.அம் முறியடிப்பிற்கு அரசுடன் மு.கா இருந்ததே காரணம் எனலாம்.
மீண்டும் ஓர் பிளவினை நோக்கி மு.கா கட்சி பயணிக்க ஆரம்பித்துள்ளது.தற்போது பணத்திற்கு சிலர் துணை போய் உள்ளதாகவும் கதைகள் சிலு சிலுக்கின்றன.சிலரின் செயற்பாடுகள் அதனை தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. வெளியில் தங்களை மக்களின் போக்கிற்கு சார்பானவராக காட்டிக் கொண்டு கட்சியின் நிலைப்பாட்டை மக்களின் மனோ
நிலைக்கு மாற்றமாக மாற்ற விளையும் சுய நல வாதிகள் கட்சியினுள் உள்ளார்கள் என்று கூறவும் மனம் சற்று விளைகிறது.கூட்டத்தில் தனது கொள்கைகளினை பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கூற விளைபவர்கள் ஏன் மக்களிடம் கூறத் தயங்குகிறார்கள்? மு.கா இன் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் அரசிலிருந்து மு.கா வெளியேற வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்.ஆனால்,அலறி மாளிகையில் ஜனாதிபதியுடன் தனித்து விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளார்.இவைகள் தலைவரினைப் புறக்கணிக்கும் செயல்கள் அல்லாமல் என்ன?
மேலும்,இன்று மு.கா ஒரு திடமான கொள்கை இன்றி பயணிப்பதும் மேலுமொரு காரணி எனலாம்.இன்று முஸ்லிம் காங்கிரஸ் உடன் பாட்டு அரசியலையும் செய்யவில்லை முரண்பாட்டு அரசியலையும் செய்ய வில்லை அதே நேரம் ஒப்பந்த அரசியல் செயக்கின்ற தோரணையில் பயணித்தாலும் பல பேரம் பேசல் சக்திகளினை மக்கள் வழங்கிய போதும் அவ்வாறான எந்த ஒப்பந்தத்தின் வெளிப்பாட்டையும் காண முடியவில்லை.அப்படியானால் இன்று மு.கா எந்த விதமான அரசியல் செய்கிறது?
த.தே.கூ தனது நெஞ்சினை நிமிர்த்தி அரசினை தன் காலடியில் வீழ்த்தி தன் விடயங்களைச் சாதித்துக் கொள்ள விளைகிறது.மு.கா அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி இதைத் தாருங்கள் அதைத் தாருங்கள் என கேட்கிறது.ஆதரித்து கெஞ்சும் மு.கா இன் கோரிக்கைகளினை அரசு ஒரு பொருட்டாகக் கூட கணக்கு எடுக்க வில்லை.எதிர்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளில் ஓரிரண்டைத் தவிர மற்றவைகளை அரசு ஏற்கிறது.பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறது.ஆனால்,த.தே.கூ அமைப்போ தான் கேட்பவைகளை முற்றாக நிறைவேற்றக் கோருகிறது அவைகள் இன்றிய பேச்சுக்கு மறுக்கிறது.
இது வரையில் ஆட்சி செய்த எந்த அரசும் இலங்கையில் முஸ்லிம்களின் பிரச்சனைகளை உவந்து தீர்க்க முன் வந்ததாக அறிய முடியவில்லை.எதிர்க் கூட்டமைப்பு மாத்திரம் தந்து விடுமா?என்ற ஓர் சலிப்பு.அரசிடமிருந்து பிடுங்கி எடுக்க இது நல்லா சந்தர்ப்பம் ஆதலால் இதனைப் பயன்படுத்துவோம் என்ற மனோ நிலை.ஜாதிக ஹெல உருமய போன்ற இனவாதக் கட்சிகள் எதிர்கூட்டனியில் பங்கேற்றுள்ளமையினால் எல்லாம் ஒன்றே என்ற நினைப்பு,தன் கோரிக்கைகள் சில அரசிடம் நிறைவேற்றும் தருவாயில் இருப்பதாள் எப்படி இத் தருணம் விலகுவது?என்ற வினா.கிழக்கு மாகாண சபையின் நிலை கேள்வி குறி போன்றவையும் மு.கா மேலும் தடுமாற்றம் அடையக் காரணம் எனலாம்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
http://www.jvpnews.com/srilanka/90958.html
மகிந்தவின் கூட்டத்தில் நிர்வாணமாக்கப்பட்ட பொது மக்கள்
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் மாலை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிக் கொண்டிருந்த போது மைதானத்துக்கு வெளியில் பிரதான வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் நாம் நேற்று செய்தி ஒன்றை பிரசுரித்தோம்.
அது தொடர்பான மேலதிக தகவல்கள்..
மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி சுமணரட்ண தேரர் தலைமையிலான குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக் குழுவினரை கூட்டம் நடைபெறும் மைதானத்துக்குள் செல்ல முடியாதவகையில் மைதானத்தின் பிரதான வாயிலை பாதுகாப்புப் படையினர்
இழுத்து மூடினர். புழுக்குணாவ மற்றும் வெவுளியாமடு மக்களின் அடிப்படைப் பிரைச்சினைகள், வாக்குரிமை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்கச் செல்கிறோம் என விஹாராதிபதி அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி சுமணரட்ண தேரர் தலைமையிலான குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக் குழுவினரை கூட்டம் நடைபெறும் மைதானத்துக்குள் செல்ல முடியாதவகையில் மைதானத்தின் பிரதான வாயிலை பாதுகாப்புப் படையினர்
இழுத்து மூடினர். புழுக்குணாவ மற்றும் வெவுளியாமடு மக்களின் அடிப்படைப் பிரைச்சினைகள், வாக்குரிமை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்கச் செல்கிறோம் என விஹாராதிபதி அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை படையினர் மைதானத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை
விஹாராதிபதியை உள்ளே செல்ல முடியாமல் தடுத்த பாதுகாப்புப் படையினர், ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள மகஜரை தங்களிடம் வழங்குமாறு கோரி மகஜரைப் பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து ஆர்ப்பாட்ட காரர்கள் வீதியை மறித்து தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் இதற்கிடையில் விஹாராதிபதிக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆர்ப்பாட்டகாரர்கள் மீது
பொலிஸார் தடியடிப்பிரயோகம் மேற்கொண்டனர் இதனால் அங்கு பதற்றமான நிலைமை
ஏற்பட்டது.
ஏற்பட்டது.
இந்நிலையில், பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரையை முடித்துகொண்டு அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியை ஆதரித்து போடப்பட்ட பதாதைகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.




http://www.jvpnews.com/srilanka/90970.html
Geen opmerkingen:
Een reactie posten