தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 december 2014

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ்க் குடும்பம் கைது!

என்னை மகிந்த துரத்த முடியாது ஹிருனிகா…

போதைப் பொருள் கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள், சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள், பண மோசடிகளில் ஈடுபடுபவர்களையே ஜனாதிபதி முதலில் கட்சியை விட்டு நீக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கும் கொள்ளையர்களை ஜனாதிபதி முதலில் வெளியேற்ற வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டதாக கட்சியின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்று ஹிருனிகாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 9ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்துக்கைள வெளியிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/90823.html

அத்தநாயக்கா வந்தார்…. மகிந்த குடும்பத்தில் அதிரடி மாற்றம்…

அவரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, திஸ்ஸ அத்தநாயக்காவை சுகாதார அமைச்சராக்கியதால், தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் பொறுப்பை பசில் ராஜபக்சவிடமிருந்து எடுத்து கோத்தாபாய ராஜபக்சவிற்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல பிரசார வேலைகளுக்கும் கோத்தாபாயவே பொறுப்பாக இருக்கும் முகமாகவே தொலைகாட்சி நேரடி கலந்துரையாடல்களில் கோத்தபாய ராஜபக்சவே கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் தொடர்பாக தபால் மூல வாக்களிப்பிற்கு முன் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடபெறவிருக்கும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புகளில் கோத்தாபாயவே கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்காரணங்களினாலேயே மீரியாபெத்த வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கும் கோத்தாபாய ராஜபக்ச சென்றதாகவும் தெரியவருகின்றது.
பசில் ராஜபக்சவை ஜனாதிபதி ஓரங்கட்டி வருவதாக பேசப்படுகின்றது.
திஸ்ஸ அத்தநாயக்கவின் சுகாதார அமைச்சர் நியமனத்தால் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு வாக்களிப்பில் பின்னடைவு ஏற்படும் என்று பசில் ராஜபக்ச ஜனாதிபதிக்கு தெரிவித்தும் அதை அவர் கணக்கெடுகாததும் ஓர் காரணம் என்றும் கூறப்படுகின்றது.
தற்பொழுது பாதுகாப்பு செயலாளர் அதிக ஆர்வத்துடன் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருவதாகவும் இவர் எதிர்வரும் நாட்களில் மிக முக்கிய பொறுப்புடன் ஜனாதிபதி தேர்தல் விடயங்களின் பரப்புரைகளுக்கு பொருப்பாக செயல்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தேர்தல் கடமைகளுக்கு சிவில் படை, பொலிஸ் படை, பாதுகாப்பு படையினர் உதவிகளையும் கோத்தபாய பெற்றுக்கொள்வார் என்றும் இன்று ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/90827.html

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ்க் குடும்பம் கைது!

இன்று காலை இவர்கள் மூவரும் இந்தியாவுக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்குச் சென்றவேளை கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்மாஸ்டரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தனது கணவர் இந்தியாவில் உள்ளார் என்றும் அவரிடமே தாம் செல்லவிருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/90830.html

Geen opmerkingen:

Een reactie posten