தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 december 2014

பசில் வசமிருந்த தேர்தல் பொறுப்புகள் கோத்தபாயவிடம் அதிரடி மாற்றம்!

மகிந்தவின் ஆடைக்குள் புலிக்குட்டிகள்- சரத் பொன்சேகா
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 06:15.21 AM GMT ]
மகிந்த ராஜபக்சவின் ஆடைக்குள் சகல புலிக் குட்டிகளும் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால ஆட்சிக்கு வந்தால், விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பொறுவார்கள் என நாட்டின் ஆட்சியாளர் கூறுகிறார்.
ஆனால் தாம் உயிருடன் இருக்கும் வரை மீண்டும் புலிகள் மீளெழுச்சி பெற அனுமதிக்க மாட்டோம்.
இந்த ஆட்சியாளரே தனது ஆடைக்குள் புலிக்குட்டிகளை வைத்துள்ளார்.
கருணா, பிள்ளையான், கே.பி போன்ற புலிகளின் தலைவர்களை தன்னுடன் வைத்துள்ளார்.
போரில் 5000 படையினர் இறந்தனர். அப்படியான நிலையில், புலிகளின் தலைவர்களை தன்னுடன் வைத்திருக்கும் இந்த ஆட்சியாளர் எப்படி தேசப்பற்றுள்ளவாராக இருப்பார் எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalx4.html
மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார்! சுதந்திரக் கட்சியினரே வாக்களிக்க மாட்டார்கள்!– லால்காந்த
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 06:38.57 AM GMT ]
பண்டாரநாயக்கவின் கொள்கைகளின் அடிப்படையில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தற்போது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்க போவதில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒரு பகுதியினர் பிரிந்து சென்று விட்டனர். அந்த கட்சியில் இருக்கும் சிலருக்கு வாக்குரிமை கூட இல்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல வாக்குகளும் கிடைக்கும் என எண்ணினால் மகிந்த வெற்றிபெற மாட்டார். அந்த கட்சியின் வாக்குகள் பிரிந்து விட்டன.
விமல் வீரவன்ஸவுக்கும் வாக்குகள் இல்லை. டியூ. குணசேகர, மகிந்த ராஜபக்சவின் புண்ணியத்தில் கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற பதவி பெற்றார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் திஸ்ஸ விதாரணவும் தேசிய பட்டியல் மூலமே நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
தினேஷ் குணவர்தனவை எடுத்துக்கொண்டால், எந்த விதத்திலும் தேசிய ரீதியில் அவருக்கு வாக்கு வங்கி என்பது இல்லை.
மகரகம தொகுதி ஒரு காலத்தில் அவருக்கு வாக்கு வங்கி இருந்தது. வாசுதேவ நாணயக்கார பற்றி பேசி பிரயோசனமில்லை.
முஸ்லிம் மக்களின் வாக்குகளும் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்காது. மேல்,தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட சகல முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.
ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் இருப்பதால், அவர் செல்வாக்கை இழப்பாரே தவிர முஸ்லிம் மக்கள் அவருக்காக மகிந்தவுக்கு வாக்களிக்க போவதில்லை. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
அத்துடன் வடக்கில் தமிழ் மக்களின் வாக்குகளும் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்காது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது. இதனால் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் எனவும் லால்காந்த மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalx6.html
திருக்கோவிலில் நாளை மகிந்தவின் தேர்தல் பிரச்சாரம்! சந்தேகத்தில் இருவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 06:49.32 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரம் இடம்பெறவிருக்கும் மைதானத்தில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு இவர்களைக் கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22, 23 வயதுகளையுடைய திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆளும்கட்சி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பகுமாரின் (இனியபாரதி) ஏற்பாட்டில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நாளை சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalx7.html

சரத் பொன்சேகாவின் மருமகன் தானுன திலகரட்ன பிணையில் விடுதலை!
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 06:58.26 AM GMT ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் மருமகன் தானுன திலகரட்ன நீதிமன்றில் முன்னிலையாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மிக நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்த தானுன திலகரட்னவை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
ஹைகோர்ப் வழக்குடன் தொடர்புடைய தானுன கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ தளவாடக் கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்ததாக தானுன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இன்று நீதிமன்றில் முன்னிலையான தானுனவிற்கு நான்கு லட்ச ரூபா ரொக்கப் பிணை மற்றும் 50 லட்ச ரூபா இரண்டு சரீர பிணை அடிப்படையில் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakoy.html
சந்தேக நபர்களை பிரதியமைச்சர் சொந்த வாகனத்தில் ஏற்றி நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றார்?
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 07:31.16 AM GMT ]
சந்தேக நபர்களை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம சொந்த வாகனத்தில் ஏற்றி நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வந்துராம்ப என்னும் இடத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடையொன்று சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்த மூன்று சந்தேக நபர்களையும் பிரதி அமைச்சர் தனது சொந்த ஜீப்பில் நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றதாக வந்துராம்ப பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் பொலிஸ் ஜீப் வண்டியில் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுவதே வழமையான நடைமுறையாகும்.
எனினும் பிரதி அமைச்சர் பலவந்தமான அடிப்படையில் சந்தேக நபர்களை பொலிஸாரிடமிருந்து மீட்டு, சொந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.
தென் இந்திய திரைப்படக் காட்சிகளைப் போன்று இவ்வாறு பிரதி அமைச்சர் சந்தேக நபர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
இதேவேளை, பிரதி அமைச்சரின் நடவடிக்கையானது சட்டவிரோதமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் நடவடிக்கைகளை நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முத்துஹெட்டிகம கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதி அமைச்சரின் இந்த நடவடிக்கை தொடர்பில் எவ்வாறான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakoz.html
பசில் வசமிருந்த தேர்தல் பொறுப்புகள் கோத்தபாயவிடம் அதிரடி மாற்றம்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 09:09.25 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பசில் ராஜபக்ச செயற்படுத்தி வந்த சகல பொறுப்புகளும் கோத்தபாய ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தெரியவருவதாவது,
ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான சகல விடயங்களையும் பொறுப்புடன் செயல்படுத்தி வந்த பசில் ராஜபக்ச, கட்சி மாறிய திஸ்ஸ அத்தநாயக்காவிற்கு சுகாதார அமைச்சை கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
அவரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, திஸ்ஸ அத்தநாயக்காவை சுகாதார அமைச்சராக்கியதால், தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் பொறுப்பை பசில் ராஜபக்சவிடமிருந்து எடுத்து கோத்தாபாய ராஜபக்சவிற்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல பிரசார வேலைகளுக்கும் கோத்தாபாயவே பொறுப்பாக இருக்கும் முகமாகவே தொலைகாட்சி நேரடி கலந்துரையாடல்களில் கோத்தபாய ராஜபக்சவே கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் தொடர்பாக தபால் மூல வாக்களிப்பிற்கு முன் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடபெறவிருக்கும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புகளில் கோத்தாபாயவே கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்காரணங்களினாலேயே மீரியாபெத்த வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கும் கோத்தாபாய ராஜபக்ச சென்றதாகவும் தெரியவருகின்றது.
பசில் ராஜபக்சவை ஜனாதிபதி ஓரங்கட்டி வருவதாக பேசப்படுகின்றது.
திஸ்ஸ அத்தநாயக்கவின் சுகாதார அமைச்சர் நியமனத்தால் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு வாக்களிப்பில் பின்னடைவு ஏற்படும் என்று பசில் ராஜபக்ச ஜனாதிபதிக்கு தெரிவித்தும் அதை அவர் கணக்கெடுகாததும் ஓர் காரணம் என்றும் கூறப்படுகின்றது.
தற்பொழுது பாதுகாப்பு செயலாளர் அதிக ஆர்வத்துடன் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருவதாகவும் இவர் எதிர்வரும் நாட்களில் மிக முக்கிய பொறுப்புடன் ஜனாதிபதி தேர்தல் விடயங்களின் பரப்புரைகளுக்கு பொருப்பாக செயல்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தேர்தல் கடமைகளுக்கு  சிவில் படை, பொலிஸ் படை, பாதுகாப்பு படையினர் உதவிகளையும் கோத்தபாய பெற்றுக்கொள்வார் என்றும் இன்று ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 
http://www.tamilwin.com/show-RUmszCSdKako1.html

Geen opmerkingen:

Een reactie posten