[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 07:06.58 AM GMT ]
கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இவர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்த போதிலும் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இது குறித்து கடந்த 16 ஆம் திகதி கபே அமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் கடிதம் மூலம் வினவியிருந்தது.
கிளிநொச்சியி்ல் 2 ஆயிரத்து 98 பேருக்கும் முல்லைத்தீவில் 2 ஆயிரத்து 53 பேருக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படை என்ன என கபே அமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் வினவியிருந்தது.
இந்த சிவில் பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளதால், அவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க இணங்கியதாக தேர்தல் ஆணையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கபே அமைப்பிடம் விளக்கம் கூறியுள்ளார்.
மேற்படி சிவில் பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்ததாக கபே அமைப்பு கூறியுள்ளது.
பொலனறுவை, அம்பாறை போன்ற பிரதேசங்களில் சிவில் பாதுகாப்பு படையினருக்கு தபால் மூலம் வாக்களிக்க இதற்கு முன்னர் இவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இராணுவத்தினர் பராமரித்து வரும் விவசாய பண்ணைகளில் இவர்கள் தொழிலாளிகளாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த சிவில் பாதுகாப்பு படையினர் தபால் மூலம் வாக்களிக்கும் போது மேலதிக அதிகாரிகளை கண்காணிப்பில் ஈடுபடுத்துவதாக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.
தபால் மூலம் வாக்களிக்கும் போது நிறுவனங்களின் தலைவர்களது அழுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்காக மேலதிக ஏற்பாடுகளை செய்வது அத்தியாவசியம் என கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakt4.html
யாழில் தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை- யாழ்.மாவட்டத்தில் 4,50,132 பேர் வாக்களிக்கத் தகுதி
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 07:44.23 AM GMT ]
ஐனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் வடக்கிலும் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் இதன் போதான தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இம்முறை பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் யாழ் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்னும் நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் மாவட்டத்தில் நீதியான நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் இதற்கமையவே பொலிஸாரின் செயற்பாடுகள் அமையும் என்றும் தேர்தல் முன்னேற்பாடு தொடர்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தல் குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் மாவட்டத்தின் பாதுகாப்புக்கள் என்பன தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று மதியம் இடம்பெற்றது.
இதன் போது தேர்தல் திணைக்கள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கு பொலிஸாரும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றுமு; வாக்கெண்டும் நிலையங்களிலும் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசேட கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு இத்தேர்தலில் மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி நீதியான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் 4,50,132பேர் வாக்களிக்கத் தகுதி
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற வுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் 4லட்சத்து 50ஆயிரத்து 132பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு தெரிவிப்பதற்கு 5 முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
ஐனாதிபதித் தேர்தல் குறித்தான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் , பாதுகாப்புக்கள் மற்றும் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்னும் நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடு என்பன தொடர்பில் மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளை நேற்று மாவட்டச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் பின்னர் யாழ்.மாவட்ட தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலை முன்னிட்டான தேர்தல் நடவடிக்கைகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. இதில் தேர்தலில் வாக்களிப்பது வாக்கு எண்ணுவது என்பன தொடர்பில் விசேடமாக உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக யாழ்.மாவட்டத்தில் 526 வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளதுடன், 36 பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களும் 8 தபால் மூலமான வாக்கு எண்ணும் நிலையங்களும் என மொத்தமாக 44 வாக்கெண்ணும் நிலையங்கள் செயற்படவுள்ளன.
தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டுக்கள் கடந்த 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 23,24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. தபால மூல வாக்களிப்பிற்கு 14328 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் யாழ் மாவட்டத்தில் இடம்பெறுகின்ற தேர்தல் முறைப்பாடுகளைப் பதிவு செய்து கொள்வதற்கு ஐந்து முறைப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது மாவட்ட செயலகத்திலும் சாவகச்சேரி, பருத்தித்துறை, வேலணை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள நிலையங்களிலும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakt5.html
காங்கேசன்துறை குண்டு வெடிப்புச் சம்பவம்! தகவல்களை மறைக்க படையினர் முயற்சி
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 08:19.30 AM GMT ]
வடமாகாணத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த சமயம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைக்க படையினர் முயற்சித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் தஙகிருந்தார்.
இந்நிலையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, கட்டடப் பகுதிக்குள் பாதுகாப்பு கடமையிலிருந்த படையினரின் பகுதிக்குள் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது.
குறித்த வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? அல்லது தற்செயலாக நடைபெற்றதா? என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.
குறித்த விசாரணைகளின் அடிப்படையில் 7 படையினர் கைது செய்யப்பட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் குறித்த தகவலினை வெளிப்படுத்த படையினர் நீண்ட மௌனம் சாதிப்பதாகவும் தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakt6.html
Geen opmerkingen:
Een reactie posten