சிக்கென்று வந்த மகிந்தரின் மகன் பக்கென்று ஓடினார்….
இந்த நிகழ்விற்காக ஏற்பாட்டாளர்கள் பேசாலை, தாழ்வுபாடு, பள்ளிமுனை போன்ற கிராமங்களை சேர்ந்த மக்களை அழைத்துவந்து காத்திருக்கச் செய்தனர். இதற்கென விசேட பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 9:30 மணியளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயத்தைத் திறந்துவைக்க வருகை தரும் நாமல் ராஜபக்ஷ, காரியாலயத்தை திறந்து வைப்பார் என்றும் இதன்போது மன்னார் மாவட்ட மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி தீர்வு பெற்று தரப்படும் என்றும் கூறியே தாம் அழைத்துவரப்பட்டனர் என்று நீண்டநேரமாகக் காத்திருந்த மக்கள் தெரிவித்தனர். 9.30 மணிக்கே தாம் நிகழ்விடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் 12.15 மணியளவிலேயே வருகைதந்தார் என்றும், வந்தவுடனேயே அவசர அவசரமாக காரியாலயத்தை திறந்து வைத்துவிட்டு, பயப்படவேண்டாம் மஹிந்த ராஜபக்ஷவை இம்முறை வெற்றியடைய செய்யுங்கள். அவர் சகலதையும் பெற்றுத்தருவார்.
தேர்தலுக்கு முன்னர் மூன்று முறை நான் மன்னார் வருவேன். அப்போது உங்களுடன் கலந்துரையாடுவேன் – என்று கூறிவிட்டு அவசர அவசரமாக வெளியேறிச் சென்றார். இதனால் பல மணிநேரம் காத்துக்கிடந்த தமக்கு ஏமாற்றம் ஏற்பட்டது என்றும், ஏற்பாட்டாளர்கள் தமக்கு தீர்வு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றிவிட்டனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/90579.html
மன்னார் மக்களை ஏமாற்றிய நாமல்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 02:04.50 PM GMT ]
மன்னார் நகர்ப் பகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தை திறந்து வைக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அங்கு காத்திருந்த மக்களை பொருட்படுத்தவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயம் ஒன்று இன்று மன்னார் நகர்ப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்காக ஏற்பாட்டாளர்கள் விசேட பஸ் மூலம் பேசாலை, தாழ்வுபாடு, பள்ளிமுனை போன்ற கிராமங்களை சேர்ந்த மக்களை அழைத்துவந்து காத்திருக்கச் செய்தனர்.
காலை 9:30 மணியளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயத்தைத் திறந்து வைக்க வருகை தரும் நாமல் ராஜபக்ஷவிடம், மன்னார் மாவட்ட மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வு பெற்று தரப்படும் என்று கூறி ஏற்பாட்டாளர்களால் தாம் அழைத்து வரப்பட்டதாக குறித்த நிகழ்விற்குச் சென்ற மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் 12.15 மணியளவிலேயே வருகைதந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அங்கு வந்தவுடனேயே அவசர அவசரமாக காரியாலயத்தை திறந்து வைத்துவிட்டு, பயப்படவேண்டாம் மஹிந்த ராஜபக்ஷவை இம்முறை வெற்றியடைய செய்யுங்கள். அவர் சகலதையும் பெற்றுத்தருவார். தேர்தலுக்கு முன்னர் மூன்று முறை நான் மன்னார் வருவேன். அப்போது உங்களுடன் கலந்துரையாடுவேன் என்று கூறிவிட்டு அவசர அவசரமாக வெளியேறிச் சென்றுள்ளார் நாமல்.
இதனால் பல மணிநேரம் காத்துக்கிடந்த மக்கள் ஏற்பாட்டாளர்களை திட்டித் தீர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதி மூடப்பட்டு மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து அமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார மேடை
மன்னார் சிறுவர் பூங்கவிற்கு முன் வீதியை இடை மறித்து அமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார மேடை இது வரை அகற்றப்படவில்லை.
இதனால் போக்குவரத்து பாதீப்பு ஏற்பட்டுள்ளதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
மேடை அமைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதும் அங்கு எந்த நிகழ்வும் இடம் பெறவில்லை.
தற்போது மக்கள் மன்னார் பஸார் பகுதிக்குச் செல்ல மாற்றுப்பாதையினை பயண்படுத்தி வருகின்றனர்.
நிகழ்வு தடைப்பட்ட நிலையில் குறித்த பிரச்சார மேடை அகற்றாமை குறித்து மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKaloy.html
Geen opmerkingen:
Een reactie posten