[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 11:34.20 PM GMT ]
தாம் ஆட்சி செய்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 75 வீதமான வடக்கு கிழக்கு பகுதிகள் மீட்கப்பட்டதாக சந்திரிக்கா அறிவித்திருந்தார்.
அண்மையில் ஹொரகொல்லவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும்> இந்தக் கூற்று முற்றிலும் பிழையானது என இராணுவம் நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாம்களை இழக்க நேரிட்டது.
1600க்கும் மேற்பட்ட இராணுவ உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதாக உயர் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண குடாநாட்டை மீட்ட ரிவிரச போர் கூட, முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் தேவைக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டது என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakry.html
முஸ்லிம் மக்கள் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கின்றனர்!– முஜிபுர் ரஹ்மான்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 11:43.33 PM GMT ]
கடந்த காலங்களில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சந்தர்ப்பம் காணப்பட்டது.
எனினும், ஜனாதிபதி மஹிந்த தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முனைப்பு காட்டவில்லை.
பொதுபல சேனா அமைப்பின் ஊடாக இனவாதத்தை தூண்டினார்.
இதனால் முஸ்லிம் மக்கள் கடும் மன வேதனையுடன் இருக்கின்றார்கள்.
இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக இருந்தால் இலங்கையும் இன்னுமொரு மியன்மாராக மாற்றமடையும்.
எனவே முஸ்லிம் மக்களின் ஆதரவு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கேயாகும்.
மஹிந்தவை வெற்றியீட்டச் செய்ய எவரேனும் முஸ்லிம் இணைந்து கொண்டால் அவருக்கு மூளையில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவின் ஆதரவு ஜனாதிபதிக்கு வழங்கப்பட உள்ளதாம், முஸ்லிம்களின் வாக்கு யாருக்கு அளிக்கப்படும் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakrz.html
வடக்கு கிழக்கு மக்கள் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்கின்றனர்!– விக்ரமபாகு கருணாரட்ன
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 11:49.39 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் மஹிந்தவிற்கா? அல்லது மைத்திரிக்கா என ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு தெளிவாக வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்கின்றனர்.
ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனவிற்காக வடக்கு கிழக்கில் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஆதரவளிப்பார்கள் என்பதனை உறுதிபடக் கூற முடியும் என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakr0.html
Geen opmerkingen:
Een reactie posten