சீனா உதவியுடன்..! கொழும்பு துறைமுகம் வலுக்கிறது எதிர்ப்புக்கள்!
தாம் ஆட்சிக்கு வந்தால், கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.
இந்த திட்டத்தினால், சிறிலங்காவின் மென்மையான கடற்சூழல் பாதிக்கப்படும் என்று, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. பெரும் எண்ணிக்கையான குடியிருப்புகளுடன் செயற்கையான தீவு அமைக்கப்படுவது, இந்தியப் பெருங்கடலின் கடல்வாழ் உயரினங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று அந்த அமைப்பினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
செயற்கைத் துறைமுகத்துக்காக பெருமளவு மண், கல் போடப்பட்டு நிரவப்படும் போது, கரையோரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மில்லியன் கணக்கான தொன் பாறைகளும், ஏனைய சிதைவுகளும் கடலில் கொட்டப்படும் போது இயற்றையான பவளப்பாறைகளும், கடலடி அமைப்புகளும் சிதைந்து போகும் ஆபத்து உள்ளது.
இந்த திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் சிறிலங்கா அரசாங்கம் முறையான சுற்றுச்சூழல் ஆய்வை மேறகொள்ளவில்லை என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுக்கான நிலையத்தைச் சேர்ந்த ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார். இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஒரு அரசாங்கம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?
வர்த்தகர்களால் கொடுக்கப்பட்ட அறிக்கையின் படி மீனவர்களின் வாழ்வாதாரத்தை எப்படி சிதைக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டுபாய் பாம் சிற்றி திட்டத்தினால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சுட்டிக்காட்டிய காரியவசம், இந்த திட்டத்தினால், பாணந்துறை தொடக்கம் நீர்கொழும்பு வரையான மேற்குக் கடலோரப் பகுதி பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை, 1.4 பில்லியன் டொலர் செலவில் சீனா மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம் எட்டு ஆண்டுகளில் கடலில் இருந்து 233 ஹெக்ரெயர் புதிய நிலப்பரப்பு உருவாக்கப்படும். இந்த திட்டத்துக்கு எதிராக நீர்கொழும்பு மீனவர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/90978.html
கிண்ணியாவில் அஸ்வறிற்கு அவமானம்…
இதேவேளை ஜனாதிபதியும் இங்கு எதிர்பார்த்தளவு பேசவில்லை. சுமார் 15 நிமிடங்களுக்குள் தனது பேச்சை சுருக்கிக் கொண்டு வெளியேறி விட்டார். அவர் தனது பேச்சில் நான் இங்கு பேசுவதற்காக வரவில்லை. உங்களையெல்லாம் கண்டு சலாம் சொல்லிவிட்டு போகவே வந்தேன் என்று கூறினார்.
மைத்திரிக்கு ஆதரவாக அவரது சகோதரர் கலந்து கொண்ட கூட்டம் ஒரு வாரத்திற்கு முன்னர் இதே மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டோரை விட குறைந்தளவினரே ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். எனினும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பஸ்களில் அழைத்து வரப்பட்டவர்களாவர்.
http://www.jvpnews.com/srilanka/91017.html
தேர்தல் தொடர்பில் மஹிந்த…
ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுதல் மற்றும் ஒளி,ஒலி பரப்பு செய்தல் தொடர்பில் அந்தந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மாநாடு தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அம்மா என்றால் அம்மா, தேர்தல் என்றால் தேர்தல், தேர்தல் நீதியானதும் நேர்மையானதுமாக நடக்கவேண்டும் அதில் இரண்டுகருத்துகளுக்கு இடமில்லை என்றார். ஊடங்களில் பக்கச்சார்பின்றி செயற்படவேண்டும் அரச ஊடகங்கள் ஒருபக்கம் சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறான ஊடகங்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
அவற்றை மீறிய ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். எதனை, எங்கே, எப்படி நிறுத்துவதென்று எனக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு மட்டுமல்ல வாக்களிப்பு முடிந்த பின்னரும் அவை தொடர்பான முடிவுகளை முறையாகவும் சரியாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் தேர்தல், தேர்தலாக இருக்கும்.
தேர்தல் பெறுபேறுகளை வெளியிடும் போது ஊடகங்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். ஆனாலும் தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு தேர்தல் முடிவுகளையும் வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து வெளியாகும் தகவல்களை செய்திகளாக்கவேண்டாம். அவ்வாறு உத்தியோகபற்றற்ற் முடிவுகள் வெளியிடப்படுமாயின் வாக்கெண்ணும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும். அவற்றை எவ்வாறு நிறுத்துவதென்பது எனக்கு தெரியும்.
ஏதாவது ஒரு வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து உத்தியோகபற்றற்ற முறையில் தேர்தல் முடிவுகள் வெளியானால் அவ்வாறான செய்திகளை வெளியிடும் நிறுவனங்களுக்கு தேர்தல் பெறுபேறுகளை வெளியிடும் உரிமை முதலில் நிறுத்தப்படும். வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்து பெறுபேறுகள் வெளியானமை தொடர்பில் முதலில் பொலிஸ் விசாரணை நடத்தப்படும். விசாரணை நிறைவடைந்ததன் பின்னரே வாக்குகள் மீண்டும் எண்ணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/91014.html
மைத்திரி மகன் அடுத்தவன் மனைவி மீது ஏற ஆசையாம்..?? மஹிந்தர்
மைத்திரியின் இக்கூற்றுக்கு தனது பிரச்சாரக்கூட்டமொன்றில் பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ச, எனது புத்திரன் குதிரையில் ஏறுவதற்கே ஆசைப்படுகின்றான் என்றும் அதில் தப்போதும் இல்லை என்றும் கூறிய அவர் , மைத்திரியின் மகன் பாசிக்குடாவில் உதவி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மகனின் மனைவி மீது ஏற முயற்சித்தாக தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/91011.html
Geen opmerkingen:
Een reactie posten