அரசாங்கத்தில் இருந்து தம்முடன் வெளியேற 20 அமைச்சர்கள் இணங்கியதாகவும், அவர்களில் தம்புள்ளையில் அழும் அமைச்சரும் ஒருவர் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எம்முடன் வருவதாக கூறிய குறித்த அரசியல்வாதி அழும் போது மக்கள் அவரது கண்ணீரை துடைக்க நேர்ந்துள்ளது.
அதேவேளை தானே முதலில் வெளியேறுவேன் என்று அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். எனினும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற அவர் தற்போது அஞ்சுகிறார் என ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனையே ராஜித சேனாரத்ன தம்புள்ளையில் அழும் அமைச்சர் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தில் இருந்து இதுவரை 111 பேர் விலகியுள்ளனர்
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்தில் இருந்து 111 மக்கள் பிரதிநிதிகள் விலகியுள்ளனர்.
இவர்களில் 4 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மூன்று பேர் பிரதியமைச்சர்கள், 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதுடன் ஏனையோர் மாகாண சபைகள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதிகள்.
இதனை தவிர தேர்தல் தொகுதிகளில் அரசியல் செல்வாக்குமிக்க தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் பலர் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியில் இணைந்துள்ளனர்.
ஆனால், எதிர்க்கட்சிகளில் இருந்து 24 பேர் மாத்திரமே அரசாங்கத்தில் இணைந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalrz.html
Geen opmerkingen:
Een reactie posten