தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 december 2014

மகிந்த அரசிடம் கேட்டது 150 கோடி! கிடைத்தது 27 கோடி ரூபா! CV… கவலை

ரஜினி பிறந்தநாள் என்ன தேசிய விடுமுறையா?- வெகுண்டெழுந்த ‘லிங்கா’ விநியோகஸ்தர்

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான லிங்கா திரைப்படத்தால் கடும் நஷ்டமடைந்துவிட்டதாக தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள சினிமா விநியோகஸ்தர்கள் வருத்ததில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இக்குற்றச்சாட்டின் உச்சபட்சமாக திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் லிங்கா திரைப்பட விநியோக உரிமையை பெற்ற ஒருவர் வெகுண்டெழுந்த காட்சி யூ டியூபில் வெளியாகியுள்ளது.
நஷ்டமடைந்த அந்த விநியோகிஸ்தர், “லிங்கா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர், நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமானது. படையப்பா திரைப்படம்போல் பிரம்மாண்ட வெற்றி பெறும் என்றெல்லாம் பேசினார்கள்.
பின்னர், கதை திருடப்பட்டது அப்படி..இப்படின்னு இவர்களாகவே தூண்டிவிட்டு வழக்கு பதிவு செய்யவைத்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினர். இதையெல்லாம் நிஜம் என நம்பி என்னைப்போன்றோர் பட விநியோக உரிமைய வாங்கினோம். ஆனால், இன்று ரூ.8 கோடி நஷ்டப்பட்டிருக்கிறேன்.
பட ரிலீஸ் பண்ண தேதியே மிகவும் தவறானது. ரஜினிகாந்த படத்தை அவரது பிறந்தநாளில் ரிலீஸ் செய்திருக்கிறார். ரஜினி பிறந்தநாள் என்ன தேசிய விடுமுறையா? அரையாண்டுத் தேர்வு காலத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டருக்கு யார் வருவார்கள்.
இத்தனை வருடம் சினிமாவில் இருக்கும் ரஜினிக்கு இதுகூடவா தெரியாது. இந்தப் படத்தை 200 கோடி ரூபாய் வரை தமிழ், தெலுங்கு, இந்தி என வியாபாரம் செய்திருக்கின்றனர். ஆனால், நாங்களோ திரையரங்கு உரிமையாளர்கள் மீது எங்கள் சுமையை இறக்கி வைத்திருக்கிறோம். ரஜினிகாந்த் தாயுள்ளம் கொண்டு எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்” என கூறியுள்ளார்.


http://www.jvpnews.com/srilanka/90782.html

படையினரின் இரத்தம் குடித்தவர் சந்திரிகா! இந்திரசார தேரர் பாச்சல்

பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர், நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அங்கு அவர், தாமே போரின் 75 வீதத்தை முடித்து வைத்ததாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உரிமை கோரியது குறித்து கருத்து வெளியிடுகையில்,
“போரில் 23ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர். இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள், சந்திரிகா குமாரதுங்கவின் பதவிக்காலத்திலேயே உயிரிழந்தனர். அவரது ஆட்சிக்காலத்தில் தான் முக்கியமான பொருளாதார இலக்குகளான, மத்திய வங்கி, கொலன்னாவ எண்ணெய்க் குதம், கட்டுநாயக்க விமான நிலையம் என்பன தாக்கப்பட்டன.
போர் வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாக இருந்தாலும், கொழும்பிலுள்ள மக்கள் அதனால் பெரிதும் பாதிப்புகளை சந்தித்தனர். ரெலிகொம், மத்திய பேருந்து நிலையம், மத்திய வங்கி, மருதானை, கலதாரி குண்டுவெடிப்புகளின் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே இதற்கெல்லாம் முடிவு கட்டினார்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/90776.html

வடமராட்சியில் பொச்சுமட்டைக் குவியலுக்குள் மனிதஎலும்புகூடுகள்!

வடமராட்சி- முள்ளியில் யார்க்கரு வீதியில் பற்றைகள் நிறைந்த பகுதியில் மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராணுவ முகாமை அழகுபடுத்துவதற்காக அப்பகுதியில் படையினர் புல்துண்டங்களை வெட்டியபோதே அவர்கள் இதனைக் கண்டனர். பொச்சுமட்டைகள் நிறைந்த இடத்தில் காணப்பட்ட இந்த எச்சங்கள் தொடர்பாக நெல்லியடிப் பொஸாருக்கு படையினர் தகவல் கொடுத்தனர்.

அங்கு சென்ற நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதையடுத்து எச்சங்களை பார்வையிட்ட பருத்தித்துறை நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் அவற்றை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் முள்ளிப்பகுதியில் இறந்த நிலையில் நாகர் கோவிலைச்சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
skliton-mulliskliton-mulli-01
http://www.jvpnews.com/srilanka/90788.html

மகிந்த அரசிடம் கேட்டது 150 கோடி! கிடைத்தது 27 கோடி ரூபா! CV… கவலை

வட மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதி ஆணைக்குழுவிடம் 149.95 கோடி ரூபாவைக் கேட்டோம். ஆனால் 27.2 கோடி ரூபா மட்டுமே கிடைத்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டை விட 2015 ஆம் ஆண்டு எங்களுக்கு சவால் மிகுந்த ஆண்டாக அமையப்போகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு சில விசேட தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அதிக நிதியைக் கேட்டோம். ஆனால் நிதி ஆணைக்குழு அதனை எமக்கு வழங்க மறுத்து விட்டது.
இதனால் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. வீதி அபிவிருத்திக்காக நாம் கேட்டதோ 77 கோடி ரூபா ஆனால் எமக்கு தரப்பட்டதோ 7.4 கோடி ரூபாவே. நாம் கேட்டதில் 10 இல் ஒரு பங்கு கூட இல்லை. வீடமைப்புக்காக ஒரு கோடி ரூபா கேட்டிருக்க 50 இலட்சம் ரூபாவும், சுற்றுலாத்துறைக்காகக் கேட்ட 5 கோடி ரூபாவுக்குப் பதிலாக 3.6 கோடி ரூபாவுமே தந்தனர். சமூக சேவைகளுக்கு 9.2 கோடி ரூபா கேட்டிருக்க 2.2 கோடி ரூபாவும், கூட்டுறவு அபிவிருத்திக்காக 14.4 கோடி ரூபா கேட்டிருக்க 60 இலட்சம் ரூபாவுமே கிடைத்தன. திண்மக் கழிவகற்றலுக்கு நாம் கேட்ட தொகையை விட 20 இலட்சம் ரூபா கூடுதலாக 2.2 கோடி ரூபாவும், கிராமிய அபிவிருத்திக்கு 50 இலட்சம் ரூபா அதிகமாக 60 இலட்சம் ரூபாவும் நிதி ஆணைக்குழு தந்தது.
நாம் நிதியே கேட்காத சந்தை அமைத்தலுக்கு 2.3 கோடி ரூபாவும், சமூக நீர் வழங்கல், மயான அபிவிருத்திக்கு தலா 1.5 கோடி ரூபா தந்துள்ளனர். இதேபோன்று தகைமை அபிவிருத்திக்கு 10 இலட்சம் ரூபா தந்தனர். ஆனால் நாம் 12 கோடி ரூபா தேவை எனக் கேட்ட உள்ளூராட்சி சேவைகளுக்கு நிதியே தரவில்லை. எல்லாமாக நாம் 149.95 கோடி ரூபாவைக் கேட்டிருந்தோம். ஆனால் எங்களுக்குக் கிடைத்ததோ 27.2 கோடி ரூபாவே. இந்த நிதியைக் கொண்டே எங்கள் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/90792.html

Geen opmerkingen:

Een reactie posten