தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 november 2014

ஐயா CV விக்னேஸ்வரன் யார்? சீமான்!

ஐயா விக்னேஸ்வரன் யார்? இவ்வளவு காலமும் அவர் எங்கிருந்தார்? என்று சீமான் இந்தியா தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேர்காணலில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இந்த ஈழ போராட்டம் எத்தனை காலமாக இடம்பெற்று வருகின்றது என ஐயா விக்னேஸ்வரனுக்கு தெரியுமா?
விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு வந்திருந்த போது இந்திய மக்கள் செய்யும் நடவடிக்கைகள் காரணமாக தங்களுக்கு நெருக்கடி வந்துள்ளதாக தெரிவித்திருக்கும் கருத்து வேதனை அளிக்கின்றது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 60 வருடங்களாக போராட்டம் நடந்து வருகின்றது. இதில் எதிலாவது இவருக்கு பங்கு உண்டா? உதாரணமாக சொல்ல போனால் அரசியல் போராட்டமாக இருக்கட்டும் இல்லை,ஆயுதப் போராட்டமாக இருக்கட்டும். அப்போது எங்கே போய் இருந்தார் விக்னேஸ்வரன்.
இறுதிக் கட்டப் போரில் கூட எந்தவிதமான நன்மைகளும் தமிழ் மக்களுக்கு செய்யவில்லை. ஒரு கடிதம் கூட வெளிநாடுகளுக்கு இவர் எழுதவில்லை. இவருக்கு எப்படி தெரியும் போராட்டம் என்றால் என்ன என்று?
ஐயாவிற்கு தெரிந்தது கோவில் வாசலும், நீதிமன்ற வாசலும்தான் வேறு ஒன்றும் இவருக்கு தெரியாது.


இதில் உண்மை என்னவென்றால் இலங்கையில் தனது மண்ணுக்காக போராடிய போராளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கொடுத்தது, ஐயா மட்டும் தான் அது போன்று அதிக பேரை சிறையில் தள்ளியதும் ஐயா தான் என தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/86912.html

Geen opmerkingen:

Een reactie posten