தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 19 november 2014

விமானத்தில் பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது!

லண்டனில் இருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த இலங்கை வம்சாவளி நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான பிரித்தானிய பெண்ணையே இந்த நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 41 வயதான நபர் எனவும் இவர் இலங்கையில் பிறந்து பிரித்தானியா சென்று குடியேறியவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை லண்டனில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYipy.html

Geen opmerkingen:

Een reactie posten