donderdag 13 november 2014

முட்டாள் பட்டம் சூட்டிக் கொள்ள நாங்கள் தயாரில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்!

பொதுபல சேனா அரசியல் கட்சியாக உருவாக ஆயத்தம்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 04:23.16 PM GMT ]
பொதுபல சேனா அரசியல் கட்சியாக உருவாகும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
தேசியவாத கொள்கைகளை பிரகடனப்படுத்தும் ஓர் கடும்போக்குவாத அமைப்பாக பொதுபல சேனா இயங்கி வந்தது.
தற்போது பொதுபல சேனா அமைப்பு அரசியல் பிரிவொன்றை ஆரம்பித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரே அரசியல் பிரிவிற்கும் தலைமை தாங்குகின்றார்.
பொதுபல சேனா இயக்கத்தின் அரசியல் விவகாரங்கள் கலகொடத்தே ஞானசார தேரர் தலைமையில் மேற்கொள்ளப்பட உள்ளது.
அரசியல் பிரிவின் தேசிய அமைப்பாளராக விதாரன்தெனிய நந்த தேரரும், ஊடகப் பேச்சாளராக டிலந்த விதானகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டமை குறித்து பொதுபல சேனா அமைப்பு அறிக்கையின் மூலம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmw5.html
முட்டாள் பட்டம் சூட்டிக் கொள்ள நாங்கள் தயாரில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 04:23.22 PM GMT ]
வடகிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை மையப்படுத்தி த.தே. கூட்டமைப்பு முன்மொழிந்திருக்கும் கோரிக்கைகளை கருத்தில் எடுக்காமல், ஜனாதிபதி தேர்தல் குறித்து எவரும் எம்மோடு பேச முடியாது. மீண்டும் மீண்டும் முட்டாள் பட்டம் சூட்டிக்கொள்ள நாங்கள் தயாரில்லை என பா.உ சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பேச்சுக்கள் தற்போது நாட்டில் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இத்தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எவையும் வெளியாகவில்லை.
ஆனாலும் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாகவும், ஆளும் தரப்பில் தற்போதைய ஜனாதிபதியே போட்டியிடப் போவதாகவும் ஊடகங்கள் வாயிலாக நாங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் எங்கள் பிரச்சினை அதுவல்ல.
தற்போதைய ஜனாதிபதி போட்டியிட்டலும், பொதுவேட்பாளர் போட்டியிட்டாலும் எமக்கு ஒன்றுமில்லை. அதைக் குறித் து நாங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளவுமில்லை.
எங்களுடைய மாற்றமில்லாத நிலைப்பாடு இதுவே. வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவ நில ஆக்கிரமிப்பினால் இடம்பெயர வைக்கப்பட்டிருக்கும் எங்களுடைய மக்கள் முழுமையாக அவர்களுடைய சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.
அதற்காக முதலில் எங்கள் மக்களுடைய நிலத்தில் நிலை கொண்டிருக்கும் இராணுவம் வெளியேற்றப்படவேண்டும்.
மேலும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். போரின் முன்னரும், பின்னரும் காணாமல் போனவர்களுடைய உண்மை நிலை என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்களுடைய நீண்டகால அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வு என்ன? இவ்வாறான சில கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.
எனவே எங்கள் கோரிக்கைகளை முறையாகவும் நியாயமாகவும் யார் பரிசீலித்து தங்கள் முடிவுகளை எமக்கு முன்வைக்கிறார்களோ அவர்கள் தொடர்பாக நாங்கள் பரிசீலிக்க தயார்.
அதை விடுத்து மீண்டும் பேசுவோம் வாருங்கள் என அரசாங்கம் எம்மை அழைப்பதும், வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்கு ஜனாதிபதிக்கு தேவையில்லை என கூறுவதும்,எம்மை பொறுத்தவரையில் தேவையற்ற பேச்சுக்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்நாட்டு, வெளிநாட்டு பிரச்சினைகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் எம்மோடு அவர்கள் பேச வேண்டும் என அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜப க்ஷ கூறியிருக்கின்றார்.
நாங்கள் அவருக்கு கூறுகின்றோம். ஒரு வருடகாலம் 2011 தொடக்கம் 2012 வரையில் அவர் சார்ந்திருக்கும் இதே அரசாங்கத்துடன்தான் பேசினோம்.
வேறு அரசாங்கத்துடன் நாங்கள் பேசவில்லையே? அந்தப் பேச்சுவார்த்தைகளில் என்ன நடந்ததோ? அதுவே எதிர்கால பேச்சுவார்த்தைகளிலும் நடக்கும்.
எனவே எமது கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் கூறியதைப்போன்று சர்வதேச கண்காணிப்பு இல்லாமல் நாம் இனி பேச தயாரில்லை.
எனவே நாம் உறுதியாக கூற விரும்புவது ஒன்று மட்டுமே. ஜனாதிபதி தேர்தலில் எவர் போட்டியிட்டாலும் அதை கு றித்து நாம் அக்கறை கொள்ளவில்லை.
எமக்கு அது ஒரு பிரச்சினையில்லை. எமக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே எங்கள் பிரச்சினைகளை மையப்படுத்திய கோரிக்கையினை எவர் முறையாகவும், நியாயமாகவும் பரிசீலி க்கிறாரோ? அவர்கள் தொடர்பில் நாங்கள் பரிசீலிக்கிறோம்.
அதைவிடுத்து பேச்சுவார்த்தைக்கு வருவதற்கும், முதலில் ஆதரவு தாருங்கள் பிறகு பேசுவோம், என்பதற்கும் நாங்கள் தயாரில்லை. மீண்டும் மீண்டும் முட்டாள் பட்டம் சூட்டிக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmw6.html

Geen opmerkingen:

Een reactie posten