ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தொலைபேசி அழைப்பை நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த புதன்கிழமையன்று எவரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் மங்கள சமரவீர, ஜாதிக ஹெல உறுமயவின் ரத்தன தேரரின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நோக்க கூட்டத்தில் பங்கேற்றார்.
முதல்நாளே சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய அவர், முத்தையா பார்க்கில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் பங்கேற்றபோது, அலரி மாளிகையில் இருந்து 11 தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. எனினும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
11வது தொலைபேசி அழைப்பு வந்தபோது மங்கல சமரவீரவின் தொலைபேசி இயக்குநர் வந்து ஜனாதிபதி உங்களுடன் பேச விரும்புவதாக தெரிவித்தார்.
இதன்போது தொலைபேசி இயக்குநரை அழைத்த மங்கள சமரவீர, தாம் முத்தையா பார்க் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் அலரி மாளிகையில் இருந்து பேஹர வாவியின் ஊடாக பார்த்தால் அது தெரியும் என்று ஜனாதிபதிக்கு கூறுமாறு தெரிவித்துள்ளார்.
எனினும் தாம் பின்னர் ஜனாதிபதியுடன் பேசுவதாகவும் அவர் இயக்குநரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் மங்கள சமரவீர மொரட்டுவையில் உள்ள தமது வீட்டுக்கு திரும்பியதும் அவரை தொலைபேசியின் ஊடாக, அமைச்சர் பெசில் ராஜபக்ச தொடர்பு கொண்டார்.
இதன்போது தமக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் பலர் செயற்படுவதாகவும் குறிப்பாக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்கு தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு திரும்புவதில் விருப்பமில்லை என்றும் மங்கள சமரவீர, பசில் ராஜபக்சவுக்கு சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து பசில் ராஜபக்ச தமது தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
இதனையடுத்து அமைச்சரவைக் கூட்டத்தின்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மங்கள சமரவீர, வெளியுறவு அமைச்சை கோரியபோதும் அதற்கு தாம் உடன்படவில்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி பொது வேட்பாளர் நிலையை ஏற்படுத்திய நாகவிஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரருடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டோர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது அரசியலமைப்பை திருத்த தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அவருக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த சந்திப்பு முடிந்த நிலையில் சோபித தேரர் எந்த அரசியல் பணிகளிலும் ஈடுபடாது அடுத்த நாள் சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எனினும் வைத்தியசாலையில் உள்ள அவர் தாம் பயமுறுத்தப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjs4.html
Geen opmerkingen:
Een reactie posten