woensdag 12 november 2014

காணாமல்போன மகனை அழைத்துச் செல்லுமாறு யாழ்.பெற்றோருக்கு நீதிமன்றிலிருந்து கடிதம்!

தலைமைத்துவ பயிற்சியில் விபத்துக்குள்ளான மாணவிக்கு எலும்பு முறியவில்லை: இராணுவம்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 10:29.15 AM GMT ]
தலைமைத்துவ பயிற்சியில் விபத்துக்குள்ளான மாணவிக்கு எலும்பு முறியவில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தலைமைத்துவ பயிற்சியில் மாணவி ஒருவரின் எலும்பு முறிவடைந்தது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
விபத்தினால் நீண்ட காலத்திற்கு அவதி ஏற்படக் கூடிய நிலைமை குறித்த மாணவிக்கு கிடையாது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையை சேர்ந்த வைத்திர்கள் இதனை உறுதி செய்துள்ளனர்.
ஆறு அடி உயரமான மதில் ஒன்றிலிருந்து குதித்த போது கௌசல்யா விஜிதமால் என்ற மாணவி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
எலும்பு முறிவடைந்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை விழுந்த காரணத்தினால் அடிப்பட்டுள்ளது.
தலைமைத்துவ பயிற்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnx4.html
சம்பிக்க ரணவக்கவும் ஜனாதிபதித் தேர்தலில்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 10:36.49 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமய தனது கொள்கை ரீதியான நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
முன்வைத்த யோசனை தொடர்பில் திருப்தி தரக் கூடிய பதிலை ஜனாதிபதியோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ வழங்கவில்லை என்பதால் அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பொது வேட்பாளராக மாதுளுவாவே சோபித தேரர் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவது குறித்து என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கு பதிலாக வேறு யாராவது பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் மாத்திரமே சம்பிக்க ரணவக்கவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது என அந்த கட்சி முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இன்றைய நாளுடன் முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுக்க உள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnx5.html
கொழும்பு துறைமுகத்தில் தென்கொரிய கடற்படைக் கப்பல்கள்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 10:48.22 AM GMT ]
தென் கொரிய கடற்படையினருக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
சேய்யங் மற்றும் சியோன்ஜி என்ற இரண்டு கப்பல்களே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
கப்பல்களில் வந்த தென் கொரிய கடற்படையினரை இலங்கை கடற்படையினர் கௌரவித்து வரவேற்றனர்.
குறித்த இரண்டு கப்பல்களுக்கான கடற்படை பொறுப்பதிகாரி ரியர் அத்மிரல் சூன் ஜூன் சோ, இலங்கை கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த பெரேராவை இன்று மாலை கடற்படை தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள சேய்யாங் கப்பலில் 227 பேர் பயணிக்க முடியும் என்பதுடன் ஜியோன்ஜி கப்பலில் 134 பேர் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnx6.html

எதிர்க்கட்சிகளின் பேரணி ஆரம்பம்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 11:17.55 AM GMT ]
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிரான மக்கள் பேரணியில் பல்றேு அரசியல் பிரமுகர்களும் பங்கு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த பேரணி தற்போது ஆரம்பித்துள்ள நிலையில், அதில் பங்குபற்றியுள்ளவர்களின் விபரம் வருமாறு.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
சஜித் பிரேமதாஸ,
மாதுலுவாவே சோபித தேரர்,
ஓமல்பே சோபித தேரர்,
அதுரலியே ரத்தின தேரர்,
திஸ்ஸ அத்தநாயக்க,
ரவி கருணாநாயக்க,
மங்கள சமரவீர,
அர்ஜீன ரணதுங்க,
கே.டீ.லால்காந்த,
சமன் ரத்னப்பிரிய ஆகியோரே இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmoz.html
காணாமல்போன மகனை அழைத்துச் செல்லுமாறு யாழ்.பெற்றோருக்கு நீதிமன்றிலிருந்து கடிதம்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 11:36.24 AM GMT ]
கொழும்பில் கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன நபரொருவரை அழைத்து செல்லுமாறு ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் இருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
யாழ்.சுன்னாகம் மத்தி, தேவாலய வீதியைச் சேர்ந்த க.வைரவநாதன் (வயது- 53) என்பவரையே அழைத்துச் செல்லுமாறு அவரது பெற்றோருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டு, கொழும்பு, ஆமர் வீதியில் உள்ள கடையொன்றில் குறித்த நபர் சிப்பந்தியாக கடமையாற்றியுள்ளார்.
இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல்போனதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது மகனைக் காணவில்லையென குறித்த நபரின் பெற்றோர்கள் தேடியலைந்துள்ளனர். எனினும், எதுவும் அறியமுடியாத நிலையில் வயதாகி இறந்துவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று குறித்த நபரை உறவினர்கள் வந்து அழைத்துச் செல்லும்படி நீதிமன்றத்தினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் தற்போது அவரை அழைத்து வர உறவினர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது
http://www.tamilwin.com/show-RUmszBSWKYmo0.html

Geen opmerkingen:

Een reactie posten