தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 november 2014

எமக்கான சலுகைகளை வழங்கினால் மாத்திரமே ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு!: ஹற்றன் மக்கள்- மின் கம்பம் விழும் அபாயம்!

ஜனாதிபதிக்கும்,நாமலுக்கும் மங்கள சமரவீர வீட்டில் விருந்துபசாரம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 06:27.18 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவும் மங்கள சமரவீரவின் வீட்டுக்கு சென்றதாக  தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் மொரட்டுவையில் அமைந்துள்ள மங்களவின் வீட்டுக்கு ஜனாதிபதியும் நாமலும் சென்றுள்ளனர்.
மங்கள சமரவீரவின் நெருங்கிய அரசியல் சகாவான ருவான பெர்னன்டஸ் மங்களவின் உறவினரான மானெல் மற்றும் நெருங்கிய சகவான சமிர என்பவரும் இதன் போது வீட்டில் இருந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.
ரணில்,சந்திரிக்கா ,கரு ஜயசூரிய போன்றவர்கள் தொடர்பில் மங்கள சமரவீர கூறிய நகைச்சுவைகளை கேட்டு ஜனாதிபதியும் நாமலும் வயிறு குழுங்க சிரித்தனர்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதிக்கும் நாமலுக்கும் மங்கள சமரவீர சிறந்த விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார்.
சந்திப்பின் போது ஆளும் கட்சிக்கு தாவுவது தொடர்பில் எந்த விடயத்தையும் மங்கள ஜனாதிபதியுடன் பேசவில்லை.
விருந்துபசாரம் முடிந்து ஜனாதிபதி வாகனத்தில் ஏறி செல்லும் போது “எனது தகவலுக்கு இன்னமுமம் பதில் கிடைக்கவில்லை. நான் யாருடன் பேச வேண்டும்” என மங்கள கேட்டுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இது குறித்து பேசுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தைகளில் இணைப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் நெருக்கமான சகாக்களில் ஒருவரான மனோ தித்தவெல்லவிடம் மங்கள ஒப்படைத்துள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYks5.html
நான் மிகவும் மன வேதனையில் இருக்கின்றேன்: மேர்வின் சில்வா புலம்பல்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 06:47.33 AM GMT ]
கடந்த கால சம்பவங்களால் தான் மிகவும் மன வேதனையுடன் இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பியகம பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது ஒரே மகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் நான் தளர்ந்து விடப் போவதில்லை.
கொள்ளையடித்து, பெண்களை மானபங்கம் செய்து, ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்றதால் எனது மகன் சிறையில் அடைக்கப்படவில்லை. சண்டையிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருடமும் பல மாதங்களும் எனக்கு அதிகாரம் இருக்கவில்லை. ஒதுங்கியிருந்தேன். நான் அதனை கேட்டு வாங்கவில்லை. ஜனாதிபதி என்னை மீண்டும் களனி தொகுதியின் அமைப்பாளராக நியமித்தார்.
எந்த பதவிக்காகவும் மண்டியிட மாட்டேன். புத்த பகவனிடமும் எனக்கு வாக்களித்த மக்களிடமும் மாத்திரமே மண்டியிடுவேன். என்றும் நான் இதனை செய்வேன்.
நான் ஆரம்பத்தை மறக்காதவன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகா போட்டியிட்ட போது பதவி ஆசை கொண்டவர்கள் ஓடி மறைந்து கொண்டனர்.
களனி விகாரையிலும் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் சரத் பொன்சேகாவை இந்த மேர்வின் சில்வாவே தடுத்து நிறுத்தினேன். இதனை முழு இலங்கையும் அறியும் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYks7.html

எமக்கான சலுகைகளை வழங்கினால் மாத்திரமே ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு!: ஹற்றன் மக்கள்- மின் கம்பம் விழும் அபாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 07:02.19 AM GMT ]
ஹற்றன் செம்புகவத்தை தோட்ட மக்கள் தனி வீடு கோரி கறுப்பு கொடிகளையும், பதாதைகளையும் ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஹற்றன் கொழும்பு பிரதான வீதியிலுள்ள செம்புகவத்தை சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
100 வருடமாக பழமை வாய்ந்த செம்புகவத்தை 7 இலக்க குடியிருப்பில் 20 காம்பிராக்கள் கொண்ட லயம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பல தடவைகள் சம்மந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் இதுவரையும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அத்தோடு தோட்ட நிர்வாகமும் அசமந்தப் போக்கை காட்டுகின்றது.
அரசாங்கம் எங்களுக்கு தனி வீடுகள் அமைத்து தர வேண்டும். இவ்விடயம் சம்மந்தமாக மலையக அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும். 
வாக்குகளை பெறுவதற்கு மட்டும் வரும் அரசியல் தலைவர்கள் வெற்றி பெற்ற பின் தங்களை மறந்து விடுகிறார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2015ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதி மலையக மக்களுக்கு சலுகைகளை வழங்கினால் மாத்திரம் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மின் கம்பம் விழும் அபாயம்: மக்கள் விசனம்
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கொட்டகலை பத்தனை கிறேக்கிலி தோட்டப் பகுதியில் 14 குடும்பங்கள் கொண்ட பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று கீழே விழும் அபாயத்தில் உள்ளது.
எந்நேரத்திலும் மின் கம்பம் கீழே விழும் அபாயம் இருப்பதாகவும், இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
பல தடவைகள் ஹற்றனில் உள்ள மின்சார சபை காரியாலயத்தில் தெரிவித்தும், தோட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என இம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுமார் 6 மாதங்களாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை மின் கம்பத்தை திருத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரியவருகின்றது.
அத்தோடு மின்சார சபை இந்த மின்கம்பத்தை சரி செய்யாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.
இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை திருத்தி அமைத்து தர வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkty.html

Geen opmerkingen:

Een reactie posten