தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 november 2014

உயர் பதவிகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து செல்கிறது அது மாற வேண்டும்! த. கலையரசன் மா.உ

இலங்கைக்கு வரும் சீன நீர்மூழ்கிக் கப்பலால் இந்தியாவுக்கு பிரச்சினையில்லை!- இந்திய தளபதி
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 04:00.17 PM GMT ]
இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வந்து செல்வது தொடர்பில் இந்தியாவுக்கு பிரச்சினையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை தளபதி சீப் அட்மிரல் ஆர் கே டோவான் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வருவது சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிரச்சினையாகும். இது இந்தியாவுக்கு பிரச்சினையில்லை என்று இந்திய தளபதி குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸின் கடற்படை தளபதி அட்மிரல் பேனாட் ரோகல் இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்து தம்மை சந்தித்த போதே இந்திய கடற்படை தளபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmw4.html


உயர் பதவிகளில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து செல்கிறது அது மாற வேண்டும்! த. கலையரசன் மா.உ
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 03:59.44 PM GMT ]
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டிலே உயர் பதவியில் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த போதும், இன்றைய சூழ் நிலையில் அது  குறைந்த வண்ணமே உள்ளது.
இந்தநிலை தொடருமானால் தமிழர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக் குறியாகி விடும். இது மாற்றம் பெற அனைவரும் உழைக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
இவ்வருடம் சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நாவிதன்வெளிப் பகுதி மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு மாகாண சபை உறுப்பினரின் முயற்சியினால் 15 ஆம் கிராமம் உதயதீபம் சமூக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும் ஜேர்மன் நாட்டின் நம்பிக்கை ஒளி அமைப்பின் நிதி உதவியில், 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
இந்த நாட்டில் நடைபெற்ற கொடிய யுத்தத்தினால் அம்பாறை மாவட்டத்தின்  நாவிதன்வெளி பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கல்வியே அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அக்காலகட்டத்தில் கல்வி கற்க வேண்டுமானால் தூர இடங்களுக்குச் சென்றே கல்வி கற்கும் நிலை இருந்தது. இன்று அது சற்று மாறி எங்கள் பிரதேசத்திலே கல்வியினைத் தொடரும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள சமூக அமைப்புக்களும் கல்விமான்களுமே முக்கிய பங்காளர்களாக இருக்கின்றனர்.
அதிலும் உதயதீபம் மேம்பாட்டு அமைப்பு பாரிய பங்காற்றி வருவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகின்றேன். நான் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் அதற்கு அப்பால் அன்றிலிருந்து இன்று வரைக்கும் கல்வி முன்னேற்றத்திற்காகவே என்னுடைய பங்களிப்பைச் செய்து வருகின்றேன்.
கடந்த வருடம் நாவிதன்வெளிப் பகுதியை போல் பெரிதும் பாதிக்கப்பட்ட பொத்துவில் பகுதிப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக 85 ஆயிரம் ரூபா செலவு செய்து வினாப்பத்திரம் பெற்று வழங்கினோம் அது போன்று 2015 ஆண்டும் அதே செயற்திட்டத்தினைச் செய்திருக்கிறேன்.
பாதிக்கப்பட்டு இருக்கும் நாவிதன்வெளிப் பகுதியில் அதிகமான மாணவர்கள் கலைப்பிரிவு மாத்திரமே கற்றுவருவதுடன் விஞ்ஞானம் கணிதப்பிரிவில் கற்பது குறைவாக உள்ளது. ஆகையால் இங்குள்ள கல்விச் சமூகம் முன்வந்து சரியான முறையில் வழிநடத்த வேண்டும். அப்போதுதான் இங்கு பொறியியலாளர்களையும் வைத்தியர்களையும் உருவாக்கி இப்பிரதேசமும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த பிரதேசமாக மாறுவதற்கு இங்குள்ள அனைவரும் பாடுபட்டு உழைக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmw3.html

Geen opmerkingen:

Een reactie posten